concern of women's health in india-பெண்களுக்கு ஏற்படும் சில பொதுவான நோய்கள் என்னென்ன? அவசியம் தெரிஞ்சுக்கங்க..!

concern of womens health in india-பெண்களுக்கு ஏற்படும் சில பொதுவான நோய்கள் என்னென்ன? அவசியம் தெரிஞ்சுக்கங்க..!

-பெண்களுக்கு பொதுவாக ஏற்படும் நோய்கள்.(கோப்பு படம்)

concern of women's health in india-இந்திய பெண்களுக்கு சில நோய்கள் பொதுவான நோய்களாக உருவெடுத்து வருகின்றன. அவைகளை இங்கு பார்க்கலாம்.

concern of women's health in india-இந்தியாவைப் பொறுத்தவரை பெண்களின் ஆரோக்யம் எப்போதுமே தீவிரமான கவலையளிக்கும் விஷயமாகவே இருந்து வருகிறது. மோசமான ஊட்டச்சத்து, மாறிவரும் வாழ்க்கை முறை, மன அழுத்தம், குடும்ப வன்முறை, தாய்வழி ஆரோக்யம் குறித்த அறியாமை, அடிப்படை சுகாதார வசதிகள் கிடைக்காமை போன்றவை முக்கிய காரணங்களாகும். நம் நாட்டில் பெண்களை பாதிக்கும் சில முக்கியமான சுகாதார பிரச்னைகள் பின்வருமாறு -

மார்பக புற்றுநோய்

இது இந்தியாவில் பெண்களை பாதிக்கும் மிகவும் பொதுவான மற்றும் வளர்ந்து வரும் உடல்நலப் பிரச்னைகளில் ஒன்றாக மாறியுள்ளது. பெண்களின் உயிரிழப்புக்கு இது ஒரு முக்கிய காரணமாகும்.

நோய் கண்டறிதலில் ஏற்படும் தாமதம்

தனக்கு ஏற்பட்டிருக்கும் நோய் குறித்து தாமதமாக தெரிந்துகொள்ளல் உயிரிழப்புக்கு வழிவகுக்கிறது. இதற்கு முக்கிய காரணம், 1. கல்வியறிவின்மை, 2. கிராமப்புறங்களில் மருத்துவமனைகள் இல்லாமை மற்றும் 3. அடிப்படை சுகாதார வசதிகள் கூட கிடைக்காதது

மேற்கூறப்பட்டுள்ள காரணங்களால் நோயை கண்டறிவதில் தாமதங்கள் ஏற்படுகின்றன.இவ்வாறு தாமதமான நோயறிதல் மற்றும் பொருத்தமற்ற சிகிச்சையளித்தல் போன்ற பொதுவான காரணிகள் மார்பக புற்றுக்கு உயிரிழக்கும் அபாயங்களை ஏற்படுத்துகின்றன.

குறிப்பாக இந்தியா போன்ற குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் மார்பகப்புற்று நோய்க்கு அடிப்படையான மற்ற முக்கியமான காரணிகள் கீழே தரப்பட்டுள்ளன :

  • தாமதமான திருமணம்
  • முதல் குழந்தையைப் பெறுவதில் தாமதம்
  • குறைவான தாய்ப்பால்
  • உடல் பருமன்
  • மரபணு காரணிகள்
  • பொருத்தமற்ற வாழ்க்கை முறை
  • மோசமான ஊட்டச்சத்து உட்கொள்ளல்

concern of women's health in india


கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்

இதுவும் இப்போது இந்தியாவில் பெண்களின் இறப்புக்கான முக்கிய காரணியாக மாறியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 33000 பெண்களை இந்த புற்று கொல்கிறது. இது மனித பாப்பிலோமா வைரஸால் ஏற்படும் பாலியல் ரீதியாக பரவும் வைரஸ் தொற்று ஆகும். இளம் பருவப் பெண்களுக்கு இந்த தொற்று ஏற்படும் அபாயம் அதிகம். இது ஒரு அறிகுறியற்ற நோயாகும். இது அருகிலுள்ள உறுப்புகள் மற்றும் திசுக்களை பாதிக்கத் தொடங்கும் வரை நீண்ட காலமாக கவனிக்கப்படாமல் இருக்கும். அதற்குக் காரணமான சில முக்கியமான காரணிகள்;

  • அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பது
  • சுகாதாரமற்ற மோசமான பாலியல் உறவு
  • குழந்தைகளுக்கு இடையே போதுமான இடைவெளியை பராமரிக்காதது
  • இளவயது திருமணம்
  • மோசமான ஊட்டச்சத்து உட்கொள்ளல்
  • பல கூட்டாளர்களுடன் பாதுகாப்பற்ற உடலுறவு

பாலிசிஸ்டிக் கருப்பை நோய் (PCOS)

இந்தியாவில் பெண்களை பாதிக்கும் பொதுவான நாளமில்லா சுரப்புக்கோளாறுகளில் இது ஒன்றாகும். கருப்பை நோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கருப்பையில் எண்ணற்ற, சிறிய அளவிலான நீர்க்கட்டிகள் உருவாகின்றன. இது மாதவிடாய் சுழற்சியை மோசமாக பாதிக்கிறது. மேலும் இறுதியில் அண்டவிடுப்பின், பெண் கருத்தரிக்க முடியாத நிலை உருவாகிறது. 12 முதல் 45 வயதுக்குட்பட்ட இனப்பெருக்க வயதுடைய பெண்களில் 5 முதல் 10 சதவிகித பெண்கள் வரை இந்த கருப்பை நோய் பாதிக்கிறது.

கருப்பை நோய் பொதுவாக பெண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்துகிறது. கருப்பை நோய்க்கான முக்கிய காரணிகள் பின்வருமாறு:

  • உடல் பருமன்
  • ஹார்மோன் சமநிலையின்மை
  • மோசமான ஊட்டச்சத்து
  • மரபணு நிகழ்வு
  • மோசமான வாழ்க்கை முறை

concern of women's health in india


இதய நோய்கள்

இதய நோய் பாதிப்புகள் பெண்களில் கடுமையான உயர்வைக் காட்டுகிறது. வாழ்க்கை முறையின் மாற்றம், அதாவது நகரமயமாக்கப்பட்ட வாழ்க்கை முறையில் வாழ்க்கையை ஒப்புவித்துக்கொள்வதால் இதய நோய்க்கான முக்கிய காரணியாக விளங்குகிறது. மாதவிடாய் நின்ற பிற்பகுதியில் உள்ள பெண்கள் மட்டுமே முன்பு இதய நோய்களுக்கு ஆளாகினார்கள். ஆனால் இப்போது பெண்களில் இளம் வயதினரும் இதய நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதற்குக் காரணமான முக்கியமான காரணிகள்:

  • வாய்வழி கருத்தடைகளின் பயன்பாடு அதிகரிப்பு
  • புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்கள்
  • உட்கார்ந்த வாழ்க்கை முறை, ( முன்பு- உடல் உழைப்பு இருந்தது.உதாரணம்- தண்ணீர் இறைத்தல், விவசாய வேலைகள், மாவாட்டுதல் போன்றவை)
  • அதிக நொறுக்குத் தீனிகளை உட்கொள்வது
  • பரபரப்பான உணவு மற்றும் ஒழுங்கற்ற உணவு நேரங்கள்.

ஆஸ்டியோபோரோசிஸ்(எலும்பு தேய்மானம்)

இது பெண்களைப் பாதிக்கும் பொதுவான உடல்நலப் பிரச்னையாகும். குறிப்பாக மாதவிடாய் நின்ற கால கட்டத்தில் பெண்களின் உடலில் கால்சியம் அளவு குறைகிறது. இதனால், எலும்புகள் பலவீனமாகி மூட்டு வலி மற்றும் எலும்பு முறிவு ஏற்படும் வாய்ப்புகளுக்கு வழிவகுக்கிறது. ஆஸ்டியோபோரோசிஸை ஏற்படுத்தும் முக்கிய காரணிகள் கீழே தரப்பட்டுள்ளன :

  • குறைந்த சூரிய ஒளி படுதல் காரணமாக வைட்டமின் 'டி' குறைபாடு ஏற்படுகிறது
  • தவறான உணவு உட்கொள்வதால் வைட்டமின் 'டி' குறைபாடு ஏற்படுகிறது
  • ஆரோக்கியமற்ற எடை அதிகரிப்பு
  • புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற ஆரோக்யமற்ற வாழ்க்கை முறை தேர்வுகள்
  • அதிகமாக உப்பு உணவு எடுத்துக்கொள்வது

Tags

Read MoreRead Less
Next Story