carom seeds in tamil-ஓமம் சாப்பிட்டால் எதெல்லாம் பயந்து ஓடும்..? மருத்துவ பயன் தெரிஞ்சுக்கங்க..!

carom seeds in tamil-முன்பெல்லாம் கிராமத்துல வீட்டு வீட்டுக்கு ஓம வாட்டர் வித்துக்கிட்டு வியாபாரி வாரா வாரம் வருவார். ஆனால், இன்னிக்கு பாட்டிலில் பேக் பண்ணி வந்துடிச்சி.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
carom seeds in tamil-ஓமம் சாப்பிட்டால் எதெல்லாம் பயந்து ஓடும்..? மருத்துவ பயன் தெரிஞ்சுக்கங்க..!
X

carom seeds in tamil-ஓமம் பயன்கள்.(கோப்பு படம்)

carom seeds in tamil-பழங்கால தமிழ் மக்களின் உணவு முறைகள் தற்போது பின்பற்றப்படுவது இல்லை. அதனால் தான் இப்போது ஆரோக்ய குறைவு ஏற்பட்டு ஏராளமான உடல் சம்பந்தமான நோய்கள் வருகின்றன. அந்த காலகட்டத்தில் நோய்களை கட்டுப்படுத்த தினமும் சமையலில் சேர்க்கப்பட்ட ஒரு பொருள் தான் ஒமம். நாம் உடலை‬ சீராக வைத்து கொள்ள ஒமம் உதவுகிறது. இது பார்ப்பதற்கு சீரகம் போன்று இருக்கும். வடிவத்தில் சற்று உருண்டையாக இருக்கும். சீரகம் நீண்டு மெல்லியதாக காணப்படும். உணவில் ஓமம் சேர்த்து சாப்பிடும் போது நம் உடலுக்கும் தேவையான ஊட்டச்சத்துகள், இரும்புச்சத்து, மாவுச் சத்து என நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. நம் உடலில் எற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கு ஒரு சிறந்த மருந்தாக ஓமம் பயன்படுகிறது. சாதாரணமாக அஜீரண கோளாறுகளுக்கு உடனடி நிவாரணியாக ஓமம் பயன்படுகிறது. இப்போது ஓமம் எவ்வளவு நன்மை உடையது என்று பார்ப்போம் வாங்க.


வயிற்று கோளாறுகள்:

குழைந்தைகள் வயிற்று கோளாறுகலால் துடித்து அழும், அது என் அழுகிறது என்று தெரியாது. வயிற்று வலி, வாய்வு இருக்கும் அப்படி அழும். ஓமத்தை நீரில் போட்டு காய்ச்சி ஆற வைத்து குடிக்க வைத்தால் வயிற்றுப் பிரச்சனை தீரும். இதனை அனைவரும் செய்யலாம்.

வாய் பிரச்சனை

நாம் வாய் மற்றும் நாக்குகளில் புண் இருந்தால் ஓமம் மற்றும் சோம்பு அரைத்து பொடி செய்து அதில் சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வாய் புண் குணமாகும். பற்களில் ஈறு பிரச்சனை இருந்தால் கூட இதை சாப்பிட்டு வந்தால் குணமாகும்.

ஆஸ்துமா பிரச்னை

ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் ஓமத்தை நன்கு கொதிக்க வைத்து கசாயம் செய்து தினமும் குடித்து வந்தால் நோய் கட்டுக்குள் இருக்கும்.

carom seeds in tamil

மூச்சுத்திணறல் மற்றும் காய்ச்சல் பிரச்னை

மூச்சுத்திணறல் உள்ளவர்கள் சிறிது ஓமத்தை எடுத்து வறுத்து ஒரு துணியில் கட்டி மார்பு பகுதியை சுற்றி ஒத்திரம் கொடுத்து வந்தால் மூச்சுத்திணறல் குணமாகும். காய்ச்சல் மற்றும் குளிர் காய்ச்சல் உள்ளவர்கள் ஓமம் மற்றும் சோம் சேர்த்து பொடி செய்து அதில் சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் குணமாகும்.


செரிமான பிரச்னை களைய

ஓமம் நம் உடலின் செரிமான பாகங்களான வயிறு, குடல் மற்றும் உணவுக்குழாய் போன்ற புண்ணை குணப்படுத்தும். ஓமம் அமிலத்தன்மை, வாயு மற்றும் நாள்பட்ட அஜீரணத்திற்கு சிகிச்சையளிக்க உதவுகின்றன. செரிமான பிரச்னைகளுக்கு அரை டீஸ்பூன் ஓமத்தை மென்று சாப்பிடலாம் அல்லது தண்ணீருடன் சேர்த்து உட்கொள்ளலாம். வயிறு உப்பிசம் என்று சொல்லும் வாயுத்தொல்லைக்கு ஓமம் சிறந்த நிவாரணி.


ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு

மாதவிடாய் காலங்களில் 'ஓம வாட்டர்' என்றும் அழைக்கப்படும் ஓம விதைகளில் காய்ச்சி எடுக்கப்பட்ட நீர் கர்ப்பிணிப் பெண்களுக்கு பெரிதும் உதவுகிறது. அவர்களுக்கு ஏற்படும் அஜீரணப் பிரச்னைகளை சீராக உதவுகிறது. மேலும் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுவதையும் சரிசெய்ய முடியும். ஓமத்தை லேசாக வறுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, பின்னர் தண்ணீரை வடிகட்டி குடிக்கலாம்.

carom seeds in tamil

சருமத்திற்கு நன்மை தருகிறது

கேரம் விதைகளில் தைமோல் உள்ளது. இது பூஞ்சை மற்றும் கிருமிகளுடன் போராட உதவுகிறது. சிறு சரும எரிச்சல் ஏற்பட்டால் ஓமம் பயன்படுத்தலாம். ஓமத்தை நன்றாக நசுக்கி, எரிச்சல் ஏற்பட்டுள்ள உள்ள தோலின் பகுதியில் நேரடியாக அவற்றைப் பயன்படுத்தலாம். உங்கள் முகப்பரு,வடுக்களை நீக்குவதற்கு ஓமத்தை தண்ணீருடன் சேர்த்து பேஸ்ட் செய்து முகப்பரு மற்றும் வடுக்களின் மீது குறைந்தது 15 நிமிடங்கள் தடவி அதை கழுவ வேண்டும்.

நரை முடியை தடுக்கிறது

ஓமம் முடி நரைப்பதைத் தடுக்க உதவுவதோடு, முடி உதிர்தலையும் குணப்படுத்தும். முடி நரைப்பதை சரி செய்ய இரண்டு டீஸ்பூன் கேரம் விதைகளை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் தண்ணீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். அப்படி செய்தால் நரை முடி வராது.

நார்ச்சத்து மிக்கது

ஓமத்தில் அதிக நார்ச்சத்து உள்ளது. இது பசியின்மையை போக்குவதற்கு இது பயன்படுகிறது. ஓமத்தை அரைத்து, சூடான நெய் சேர்த்து, உங்கள் உணவோடு சேர்த்து உண்ண வேண்டும். அவ்வாறு சாப்பிட்டால் பசியின்மை நீங்கி நன்றாக பசி எடுக்கும்.


தொப்பை குறைய

ஓமத்தில் உள்ள அதிக நார்ச்சத்து நம் உடலில் இருந்து அதிகப்படியான கொழுப்பை அகற்ற உதவுகிறது. அதில் உள்ள மோனோ மற்றும் பாலி நிறைவுறா கொழுப்புகள், கொழுப்பின் அளவை பராமரிக்க உதவுகிறது.

கீல்வாத வீக்கத்தை குறைக்க

ஓமம் கீல்வாதத்தில் உள்ள மூட்டுகளைச் சுற்றியுள்ள பிடிப்புகளை விடுபட வைக்கும். ஏனெனில், அதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. இது வலியைத் தணிக்கவும் கீல்வாத வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

carom seeds in tamil

சமையல் பயன்பாடு

ஓமம், அதிக ஊட்டச்சத்து மதிப்பைக் கொண்டுள்ளது. மேலும் உணவின் நறுமணத்தையும் சுவையையும் மேம்படுத்துகிறது. காய்கறிகள், கறி வகைகள் அல்லது சாம்பார் தயாரிக்கும் போது ஓமத்தை முழுதாக அல்லது தூள் வடிவில் பயன்படுத்தலாம். உங்கள் உணவை ஆரோக்யமானதாக மாற்ற விரும்பினால், உங்கள் அஜீரண பிரச்னைகளை தீர்க்க விரும்பினால், சீரகத்துடன் சிறிது ஓமத்தையும் பயன்படுத்தலாம்.

Updated On: 9 Dec 2022 10:03 AM GMT

Related News

Latest News

 1. டாக்டர் சார்
  Health Benefits Of Lemon எலுமிச்சம்பழத்திலுள்ள மருத்துவ குணங்கள் ...
 2. கந்தர்வக்கோட்டை
  பள்ளி செல்வதற்கு வசதியாக நகர் பேருந்துகளை இயக்கக் கோரி மறியல்...
 3. லைஃப்ஸ்டைல்
  Importance Of Blood Bank ரத்த வங்கிகளின் செயல்பாடுகள் ...
 4. புதுக்கோட்டை
  புதுக்கோட்டை மாவட்டத்தில் பிற்படுத்தப் பட்டோர் நலக் கல்லூரி மாணவர்...
 5. கடையநல்லூர்
  உரிமம் புதுப்பிக்கப்படாத வளர்ப்பு யானையை முகாமிற்கு அனுப்பி வைத்த...
 6. லைஃப்ஸ்டைல்
  Benefits Of Apartment House அபார்ட்மென்ட் வீடுகளில் போதிய வசதி...
 7. தர்மபுரி
  காமாட்சி அம்மன் கோவிலில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
 8. ஓசூர்
  வீலிங் செய்து அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டி சாகசம் செய்தவர்கள்...
 9. லைஃப்ஸ்டைல்
  Importance Of Aadhar Card In Tamil ஆதார் கார்டின் பயன்கள் என்னென்ன ...
 10. தஞ்சாவூர்
  தஞ்சாவூரில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்