butter in tamil-யாரெல்லாம் வெண்ணை சாப்பிடக்கூடாது..! தெரிஞ்சுக்கங்க..!
butter in tamil-இளைஞர்கள் தற்காலத்தில் 'வெண்ணை' என்று ஒருவரை வசைபாடுவது வழக்கமாகிவிட்டது. வெண்ணையின் நன்மை அறிவோம் வாருங்கள்.
HIGHLIGHTS

butter in tamil-வெண்ணை பயன்கள் (கோப்பு படம்)
butter in tamil-என்னதான் நாகரிகம் வளர்ந்தாலும் பாரம்பர்ய உணவுகளுக்கு இன்றைய நாகரிக இளைஞர்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. இருப்பினும் பல இளைஞர்கள் கண்ட கண்ட உணவுகளையும் தின்று உடல் ஆரோக்யத்தைக் கெடுத்துக்கொள்வதுடன் உடல் பருமன் அடைந்து க குனிந்து நிமரக்கூட முடியாமல் அவஸ்தைப்பட்டு வருகின்றனர். பழங்காலம் தொட்டே நமது முக்கிய உணவுப்பொருட்களில் ஒன்றாக வெண்ணெய் இருந்ததை மறந்துபோனோம்.
வெண்ணெய் என்றவுடன் கிருஷ்ணர் ஞாபகம்தான் எல்லோருக்கும் வரும். வெண்ணை திருடி நின்றதும், அவரது அன்னை யசோதயிடம் அடிவாங்கியதும் நமக்கெல்லாம் தெரியும். இதெல்லாம் வெண்ணையின் பலன்களை மக்களுக்கு தெரியப்படுத்தவே.
வெண்ணையில் உள்ள ஊட்டச் சத்துகள் மற்றும் நன்மைகள் குறித்து பார்ப்போம் வாங்க.
butter in tamil
வெண்ணையில் உள்ள ஊட்டச்சத்துகள்
வெண்ணையில் அதிகமாக கொழுப்புச்சத்து மட்டுமே உள்ளது. அது தவிர குறைந்த அளவு விட்டமின் 'ஏ' இருக்கிறது. இதைத் தவிர வேறு எந்த சத்துக்களும் வெண்ணையில் கிடையாது.
குழந்தைகள்
குழந்தைகளுக்கு வெண்ணையை தாராளமாக கொடுக்கலாம். குறிப்பாக எடைக்குறைந்த குழந்தைகளுக்கு இதனை தாராளமாகக் கொடுக்கலாம். அதே போல குழந்தைகளுக்கு காலை நேரங்களில் மட்டும் வெண்ணையை கொடுப்பது சிறப்பாகும். இரவு நேரங்களில் கொடுப்பதை தவிர்த்துவிட வேண்டும்.
பெரியவர்கள் :
குழந்தைகளைத் தவிர,விளையாட்டு வீரர்கள், உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள் வெண்ணெயை உணவுடன் அவ்வப்போது சேர்த்துக்கொள்ளலாம். காச நோயால் அவதிப்படுபவர்களுக்கு வெண்ணை மிகவும் நல்லது. இது நீண்ட நேரத்திற்கு உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கும் தன்மை கொண்டது.
butter in tamil
யார் யாருக்கு வேண்டாம்
வெண்ணையை எல்லாரும் சாப்பிடக் கூடாது. 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதயநோய், உடல் பருமன் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், வெண்ணையை சாப்பிடக்கூடாது. ஏனென்றால் வெண்ணையில் இருக்கும் கலோரி எளிதில் கரையாது. இதனால் உடலில் உள்ள கொழுப்பின் அளவும் அதிகரிக்கும்.
வெண்ணையா? நெய்யா? எது நல்லது ?
வெண்ணையை விட நெய் தான் நல்லது. வளரும் குழந்தைகளுக்கு தினமும் நெய் கொடுக்கலாம். அதனை காலை நேரங்களில் சூடான உணவுகளில் கலந்து கொடுக்கவேண்டும். நெய் சேர்க்கும் போது உணவில் கண்டிப்பாக உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் குழந்தைகளுக்கு உடல் வெப்பத்தை குறைக்கும். ஆறிப் போன உணவு, இரவு நேரங்களில் மற்றும் அசைவ உணவுகளுடன் நெய் பயன்படுத்தக்கூடாது.
butter in tamil
பயன்பாடு மற்றும் பாதிப்புகள்
வெண்ணையை பிரட்டுடன் மட்டுமல்ல பொங்கல், சப்பாத்தி, சாம்பார் போன்ற உணவுகளுடன் சிறிதளவு சேர்க்கலாம். இது சுவையை அதிகரிக்கும். அதே போல் வெண்ணையை அதிகமாக எடுத்துக் கொண்டால், பசி எடுக்கும் தன்மையைக் குறைத்துவிடும். அதிகமாக வெண்ணை பயன்படுத்துவதால் இதயம் சார்ந்த நோய்கள், சர்க்கரை நோய் போன்றவை ஏற்படும் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.