கட்டுடம்பு வேணுமா..? நாட்டுச் சர்க்கரை பயன்படுத்துங்க..! ஆரோக்யமா வாழுங்க..!
brown sugar in tamil-நாட்டுச் சர்க்கரை நன்மைகள் (கோப்பு படம்)
Brown Sugar Benefits in Tamil-வெள்ளை சர்க்கரையில் ஏராளமான வேதிப்பொருட்கள் சேர்க்கப்பட்டு அது வெள்ளையாக்கபப்டுவதால் அதில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் குணங்களும் அதிகம் என்ற விழிப்புணர்வு தற்போது ஓரளவு ஏற்பட்டுள்ளது. அதற்கு பதிலாக நாட்டு சர்க்கரை பல நன்மைகளை கொண்டதாகும்.
கரும்பில் இருந்து நேரடியாக ஆலையில் தயாரிக்கப்படும் பிரவுன் சுகர் என்னும் நாட்டு சர்க்கரையில் எந்த வேதிப்பொருட்களும் கலக்கப்படாமல் தயார் செய்யப்படுகிறது. பொதுவாகவே வெள்ளை சர்க்கரை பயன்பாட்டைக் குறைத்து, நாட்டுச் சர்க்கரை பயன்பாட்டை அதிகரித்தால் பல ஆரோக்ய நன்மைகள் கிடைக்கும். அதை இப்போது பார்ப்போம் வாருங்கள்.
வேதிப் பொருட்கள் அற்ற நட்டுச்சர்க்கரை...!
வெள்ளை சர்க்கரையை போன்று நாட்டுச் சர்க்கரையில் எந்த வித வேதி பொருட்களும் கலப்பதில்லை. முற்றிலுமாக இயற்கை ரீதியாகவே இதனை தயார் செய்கின்றனர். ஆதலால், இயற்கையாகவே இதில் எண்ணற்ற தாதுப்பொருட்கள், ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் நிறைந்திருக்கிறது. அத்துடன், எந்த வித பாதிப்பையும் இது உடலுக்கு ஏற்படுத்துவதில்லை.
கலோரிகள் அற்ற நாட்டுச் சர்க்கரை
நாட்டுச் சர்க்கரையில் கலோரிகள் இல்லை. கலோரிகளின்றி உடலின் ஆற்றலை அதிகரிக்கும் சக்தி கொண்டது. ஆனால், தற்போது பயன்பாட்டில் உள்ள சர்க்கரையில் கலோரிகள் மிகவும் அதிகம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
செரிமானம்
நாட்டுச் சர்க்கரை உடலுக்குள் செல்லும் போது அசிட்டிக் அமிலமாக மாறி, வயிற்றில் உள்ள நொதிகளின் செயல்பாட்டை அதிகரித்து, எளிதில் செரிமானமாகச் செய்யும் செயலை தூண்டுகிறது. இதுவே மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது.
ஹீமோகுளோபின் அதிகரிக்க
இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைந்திருந்தால் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவில் நாட்டுச் சர்க்கரையும் ஒன்றாகும். இது இரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் இதய நோய்களில் இருந்து நாட்டுச் சர்க்கரை காக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. புற்று நோய் பாதிப்புகள் ஏற்படாமல் காக்கிறது.
நீரிழிவு குறைப்பாட்டை தடுக்கிறது
நாட்டுச் சர்க்கரையை அதிகம் உபயோகிப்பதன் மூலம் கொழுப்பு சேர்வதைத் தடுக்க முடியும். வெள்ளை சர்க்கரையில் உள்ள சில ரசாயனங்கள் உடலில் இன்சுலின் சுரப்பை பாதித்து இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து, நீரிழிவு குறைபாட்டை ஏற்படுத்த கூடும். நாட்டு சர்க்கரை பயன்பாடு இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தாது.
மாதவிடாய் வலிகளுக்கு
பெண்களின் மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வலி அவர்களுக்கு பெரும் அவஸ்தையை ஏற்படுத்தும்.இவ்வாறு ஏற்படும் மாதவிடாய் வலிக்கு அந்த வலியை போக்கும் மருந்தாக நாட்டு சர்க்கரை செயல்படுகிறது. மேலும், கர்ப்பப்பையின் தசைகளை இவை தளர்த்தி மாதவிடாய் வலியை குறைத்து விடுகிறது.
கர்ப்பிணிகளின் நலனுக்கு
குழந்தை பிறந்த பின்னர் குழந்தை பெற்றெடுத்த தாய் உடல் அளவில் மிகவும் வலுவிழந்து இருப்பார்கள். இதனை சரி செய்ய பல அறிய உணவு சாப்பிட்டாலும் கூட முழுமையான பலன் கிடைத்திருக்காது. உடனடியாக பழைய ஆரோக்ய நிலைக்கு திரும்ப நாட்டுச் சர்க்கரை பெரிதும் உதவும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அஜீரண கோளாறுகளுக்கு
செரிமான பிரச்னையால் இன்று பலர் கஷ்டப்படுகின்றனர். இனிஅதற்கு நாட்டு சர்க்கரையை உணவில் சேர்த்து கொண்டால் இந்த ஜீரணக் கோளாறுகள் விரைவில் குணமாகும். அஜீரணக் கோளாறுகள் ஏற்பட்டால் உடனே நீரில் நாட்டு சர்க்கரை மற்றும் சிறிது இஞ்சியை சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் உடனே மாற்றம் தெரியும்.
சோர்வை விரட்டும்
தினமும் சோர்வாக இருப்பது போல உணர்கிறீர்களா..? கவலையே வேண்டாம். இனி இந்த பிரச்னைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் வந்துவிட்டது. ஆமாங்க..வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக நாட்டு சர்க்கரையைப் பயன்படுத்துங்க. பலவித நன்மைகள் கிடைக்கும். நாட்டுச் சர்க்கரை சோர்வாக உள்ள உடல் செல்களை புத்துணர்வூட்டி சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu