/* */

புற்றுநோய்க்கான அறிகுறிகள் என்ன..? தெரிஞ்சுக்கங்க..!

Brain Tumor Meaning in Tamil-புற்றுநோய் சிலநேரங்களில் உடனே எந்த அறிகுறியும் காட்டாது. ஆனால், ஒரு குறிப்பிட்ட காலத்தில் உடலில் ஏதோ ஒரு வகையில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

HIGHLIGHTS

Brain Tumor Meaning in Tamil
X

Brain Tumor Meaning in Tamil

புற்றுநோய் பொதுவிளக்கம்

Brain Tumor Meaning in Tamil

ஆண்டுதோறும் உலகில் பல்வேறு புற்றுநோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. குணப்படுத்தக் கூடிய புற்றுநோய், குணப்படுத்த முடியாத புற்றுநோய் என இந்த உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட புற்றுநோய்கள் உள்ளன. மிகவும் ஆபத்தான புற்றுநோய்களில் ஒன்று மூளைப் புற்றுநோய் ஆகும்.

உலக மக்கள் தொகையில் 1 சதவீதத்தினர் மட்டுமே இந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், இதில் மோசமானது அதன் அறிகுறிகள் பெரும்பாலும் தலைவலி அல்லது ஒற்றைத் தலைவலி போன்று சாதாரண குறைபாடுகளாகவே அறிகுறிகள் காட்டுகின்றன.

எனவே மூளைப் புற்றுநோய்க்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியமாகும். அதற்கு இதன் ஆரம்பகால அறிகுறிகளை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். எந்த அறிகுறிகளையும் அலட்ச்சியப்படுத்திவிடக்கூடாது.

புறக்கணிக்கக் கூடாத மூளை புற்றுநோயின் அறிகுறிகள் என்னென்ன என்று பார்ப்போம் வாங்க.

அடிக்கடி ஏற்படும் தலைவலி

மூளைப் புற்றுநோயின் பொதுவான அறிகுறிகளில் ஒன்று தொடர்ச்சியான தலைவலி. சிகிச்சையளிக்க சாதாரண மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். கொஞ்ச நேரத்தில் வலி விட்டுவிடலாம். ஆனால், இது ஒரு புற்றுநோயின் அறிகுறியாகக் கூட இருக்கலாம். இது மூளை புற்றுநோயாகக் கூட இருக்கலாம். நாளடைவில் இந்த தலைவலி மோசமாக மாறலாம். குறிப்பாக காலையில் எழுந்தவுடன் தலைவலி அதிகமாக இருக்கும். இவ்வாறு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியமாகும்.


பார்வைக் குறைபாடு

மூளைப் புற்றுநோயின் மற்றொரு முக்கிய அறிகுறி பார்வை இழப்பு அல்லது பார்வைத்திறன் குறைதல். கண்பார்வையில் குறைபாடு ஏற்பட்டு மங்கலாக தெரியலாம். பார்வையை இழக்கும் நிலை கூட ஏற்படலாம். இதை கண்களின் நரை நிலை என்றும் அழைக்கலாம். குறிப்பாக விரைவாக எழுந்து நிற்கும்போது அல்லது திடீரென இருக்கும் நிலையை மாற்றும்போது கண்கள் மங்கலாக தெரிந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியமாகும்.

பலவீனம் ஏற்படுதல்

மூளையில் புற்றுநோய்க் கட்டி வளரத் தொடங்கும்போது, பெரும்பாலான நேரம் பலவீனமாகவும், சோம்பலாகவும் உணரலாம். ஏனெனில், கட்டி வளர்ச்சியுடன், மூளைக்கு அதிக அழுத்தம் ஏற்படுகிறது. அதனால் தூக்கத்தைக் கூட பாதிக்கும். தூக்கம் குறைவதால் ஒரு நிலையற்ற தன்மை ஏற்படும். அதனால் சோம்பலாக இருப்பதுபோல உணரமுடியும். சிலநேரங்களில் மயக்கம் வருவது போல இருக்கும். அதனால் உடனே மருத்துவரிடம் ஆலோசனைப் பெறவேண்டும்.

வலிப்பு ஏற்படுதல்

மூளைப் புற்றுநோயின் மிகவும் பொதுவான அறிகுறி இதுவாகும். வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவரிடம் சென்றால் முதலில் அவர்களுக்கு மூளைப் புற்றுநோய்க்கான சோதனைதான் செய்யப்படும். அவர்களது குடும்பத்தில் யாருக்கும் இல்லாமல் திடீரென ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு மூளையில் கட்டி இருக்க அதிக வாய்ப்புள்ளது. மூளைப் புற்றுநோய் கண்டறியப்பட்ட நோயாளிகளில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதியினர் புற்றுநோயைக் கண்டறிவதற்கு முன்பு வலிப்பை உணர்ந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன.

சமநிலை இழப்பு

மூளை அமைப்பு பாதிக்கப்படும்போது, அது உடலின் ஒட்டுமொத்த இயக்கத்தை பாதிக்கிறது. எனவே, நடப்பதில் சிக்கல் இருந்தால் அல்லது நிலையற்ற தன்மையால் ஒரு பக்கம் சாய்ந்தால், மூளை ஒருங்கிணைப்பு மற்றும் சமநிலையில் பிரச்னை உள்ளது என்று பொருளாகும். இவ்வாறு இருந்தால் உங்களுக்கு மூளையில் புற்றுநோய் இருக்க வாய்ப்புள்ளது.

புற்றுநோய் வைரஸ் கிருமிகள்.

கருவுறாமை

நம் ஹார்மோன்களின் உற்பத்தியைக் கூட மூளை கட்டுப்படுத்த முடியும். ஒருவர் புற்றுநோயால் அவதிப்பட்டால், அது பிட்யூட்டரி சுரப்பியை பாதிக்கும். மேலும் அதிக அளவு ஹார்மோன்களை சுரக்கக்கூடும். இது பிற சுரப்பிகளின் இயல்பான வேலையைத் தடுக்கலாம். இதனால் கருவுறுதலில் பிரச்சினை ஏற்படலாம்.

கேட்கும் திறன் குறைதல்

மூளை புற்றநோய்க் கட்டிகள் ஒரு நபரின் கேட்கும் திறனையும் பாதிக்கலாம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனுபவிக்கும் சில அசாதாரண இடையூறுகளில் காது கேளாமையும் ஒன்று. காதுகளில் இரைச்சல் உணர்வுத் தோன்றும்.

அறிவாற்றல் குறைதல்

மூளைக் கட்டி மூளையின் செயலாக்க வேகத்தையும் பாதிக்கலாம். ஒரு நபர் அடிப்படை பணிகளை முடிக்க வழக்கத்தை விட அதிக நேரம் எடுத்தால், மருத்துவரை அணுகவேண்டும். அறிவாற்றலில் இடையூறு மற்றும் நினைவுத்திறன் குறைதல் மூளைப் புற்றுநோயின் குறிப்பிடத்தக்க அறிகுறிகளாக இருக்கலாம்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 21 Feb 2024 5:09 AM GMT

Related News

Latest News

 1. இந்தியா
  மூன்றாவது முறையாக மோடி மேஜிக்! டெய்லிஹண்ட் கருத்துக்கணிப்பு
 2. தமிழ்நாடு
  தேர்தல் கால சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே அறிவிப்பு
 3. வீடியோ
  Free Bus கொடுத்து ஆட்டோக்காரர்களின் வாழ்வாதாரத்தை கெடுத்த திமுக !...
 4. வீடியோ
  Stalin ஒன்னும் செய்யல திமுக இருந்து என்ன புரியோஜனும் ! #public...
 5. இந்தியா
  தேர்தல் நெருங்கும் நேரத்தில் சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள்
 6. இந்தியா
  தேர்தல் விதிகளுக்கு அரசியல் கட்சிகள் இணக்கம்: தேர்தல் ஆணையம் திருப்தி
 7. கிணத்துக்கடவு
  ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் துரோகம் செய்தவர் பழனிசாமி : உதயநிதி...
 8. வீடியோ
  Central Chennai-யில் பாஜகக்கு பெருகும் ஆதரவு மண்ணை கவ்வும் திமுக !...
 9. வீடியோ
  கீழ்த்தரமாக பேசும் Dayanidhi சென்னை மக்கள் குமுறல் ! #dmk #dayanidhi...
 10. வீடியோ
  திமுக பாஜக அதிமுக வெல்ல போவது யார் ? #dmk #admk #bjp #election...