Blueberry in Tamil Name-ப்ளூ பெர்ரி பழத்தின் ஆரோக்ய நன்மைகள்..!

blueberry in tamil name-ப்ளூ பெர்ரியின் ஆரோக்ய நன்மைகள் (கோப்பு படம்)
Blueberry in Tamil Name
ப்ளூ பெர்ரி என்பது தமிழில் அவுரி நெல்லி என்று அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் அவுரி நெல்லி “சூப்பர்ஃபுட்” என்று அழைக்கப்படுகிறது. இந்த சிறிய ஆனால் வலிமையான அவுரி நெல்லி ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய பழமாகும். அவை இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இதய நோயைத் தடுக்கவும், நினைவாற்றலை மேம்படுத்தவும், உடற்வலிமையை மீட்டெடுக்க உதவவும் மேலும் பல நன்மைகள் நிறைந்ததாகும்.
Blueberry in Tamil Name
அவுரிநெல்லிகளின் ஊட்டச்சத்து நன்மைகள்
80 கிராம் அவுரிநெல்லிகள் வழங்குகிறது:
32Kcal/135KJ
0.7 கிராம் புரதம்
0.2 கிராம் கொழுப்பு
7.3 கிராம் கார்போஹைட்ரேட்
1.2 கிராம் நார்ச்சத்து
53 மி.கி பொட்டாசியம்
வைட்டமின் ஈ 0.75 மி.கி
வைட்டமின் சி 5 மி.கி
குறைந்த கலோரிகள் ஆனால் ஊட்டச்சத்துக்கள் அதிகம்
ப்ளூபெர்ரி பழம் தரும் ஆரோக்கிய நன்மைகள்
இதய ஆரோக்யம்
அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள். குறைவான கலோரிக்கள் நிறைந்துள்ள இனிப்பு சுவை மிகுந்த ப்ளூபெர்ரி உங்கள் இதயம் ஆரோக்யத்தை பாதுகாக்கும் பழமாக உள்ளது. வயது முதிர்ச்சியை தடுத்தல், இரத்த அழுத்தத்தை கட்டுப்படடுத்துதல், நினைவாற்றலை மேம்படுத்துதல் என பல்வேறு நன்மைகள் தருகிறது.
Blueberry in Tamil Name
வயது முதிர்வை தடுக்கும்
சூப்பர்ஃபுட் என்ற அழைக்கப்படும் ப்ளூபெர்ரிகள் பல்வேறு இனிப்பு சார்ந்த பதார்த்தங்களில் சேர்த்து உண்ணலாம். இதில் எக்கச்சக்கமான ஆரோக்ய நன்மைகள் நிறைந்துள்ளன. அதிக அளவிலான ஆன்டிஆக்ஸிடன்ட்கள், குறைவான கலோரிகள் உள்ள இந்த பழம் இதயத்துக்கு நன்மை தருவதாகவே உள்ளது. வயது முதிர்வை தடுத்து, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. அதுமட்டுமில்லாமல் நினைவாற்றலை மேம்படுத்துகிறது.
Blueberry in Tamil Name
அதிக ஆன்டிஆக்ஸிடன்ட்கள்: ப்ளூபெர்ரியின் நிறத்தை தரும் ஆன்தோசயனின் என்ற ஃப்ளேவநாய்ட்களில் எக்கச்சக்கமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது உடலுக்கு தேவையான ஆக்ஸிஜனேற்றத்தை தருகிறது
Blueberry in Tamil Name
இதய நோய்க்கு எதிராக பாதுகாப்பு:
இந்த பழத்தில் நிறைந்துள்ள நார்ச்சத்து, பொட்டசியம், ஃபோலேட், வைட்டமின்கள், சைடோ ஊட்டச்சத்துகள் ரத்தத்தில் கலந்திருக்கும் கெட்ட கொழுப்புகளை நீக்குகிறது. இதன் இதயத்தின் செயல்பாடு சீராக இருப்பதுடன் அதுசமந்தமான நோய் பாதிப்புகள் தடுக்கப்படுகிறது. எனவே ப்ளூபெர்ரி பழங்களை இதயத்தின் நண்பன் என்று அழைக்கலாம்
Blueberry in Tamil Name
கண்களின் ஆரோக்யத்துக்கு நன்மை:
நாள்தோறும் ஒரு ப்ளூபெர்ரி சாப்பிட்டு வந்தால் பார்த்திறனாது மேம்படுகிறது. இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், அழற்சிக்கு எதிரான பண்பு மற்றும் கொலாஜன்களை-நிலைப்படுத்தும் பண்புகள் பார்வைத்திறனை மேம்படுத்த உதவுகிறது
Blueberry in Tamil Name
சிறுநீர் பாதை தொற்றுக்கு எதிரான செயல்பாடு:
சிறுநீர் பாதையில் தொற்று ஏற்பட்டால் பல்வேறு நோய் தொற்றுகள் உண்டாகும். குறிப்பிட்ட பாக்டீரியாக்களுக்கு எதிரான பண்பு ப்ளூபெர்ரி பழத்தில் அதிகம் நிறைந்திருப்பதால் சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படாமல் தடுப்பதோடு, அதுதொடர்பான நோய் பாதிப்புகளும் உண்டாகாமல் பார்த்துக்கொள்கிறது.
ஸ்ட்ரெஸ் குறைகிறது:
உடலில் உள்ள ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ் அளவை குறைப்பதன் மூலமாக எண்டோதீலியலின் செயல்பாட்டை ப்ளூபெர்ரி ஊக்குவிக்கிறது என்றும் அவர் கூறினார். உடலில் உள்ள செல்கள் மற்றும் திசுக்களை பாதிக்கக் கூடியதாக ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ் இருக்கிறது.
பாலிபினால்ஸ் மற்றும் பாலிபினால் நிறைந்த ப்ளூபெர்ரி போன்ற உணவுகள் நம் உடலில் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ் அளவை குறைப்பதற்கு உதவிகரமாக இருக்கிறது என்று முந்தைய ஆய்வு மூலமாக தெரிய வந்தது.
ஞாபக மறதியை போக்கும்
வயதான காலத்தில் சிலருக்கு ஞாபக மறதி வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். சிலருக்கு இளமையிலேயே ஞாபக மறதி அதிகமாக இருக்கும். இதனை போக்க தினமும் ப்ளூபெர்ரி பழத்தை எடுத்துக் கொண்டால் இது மூளையில் உள்ள செல்களை ஆரோக்யமாக வைத்து ஞாபகமறதி நோய் வராமல் எதிர்க்கிறது.
புற்றுநோய் இதய நோய் தடுக்கும்
ஒரு கப் ப்ளூபெர்ரி பழத்தை சாப்பிடுவதாலும் உடலுக்கு வைட்டமின் ஈ சத்தும் மற்றும் வைட்டமின் சி சத்தும் உடலுக்கு கிடைத்துவிடுகின்றன. வைட்டமின் சி மாத்திரை எடுத்துக் கொண்டால் 200 அளவுதான் சக்தி கிடைக்கும். ஆனால் ப்ளூபெர்ரி பழத்தை எடுத்துக் கொண்டால் பல மடங்கு வைட்டமின் சத்து உடலுக்கு கிடைக்கிறது.
இது புற்று நோய் மற்றும் இதய நோய் சம்பந்தமான நோய்களை உருவாக்கும் கிருமிகளை அழிக்கும். மேலும் உடலில் உள்ள தேவையற்ற கிருமிகளை அழித்து விடுவதால் தோல் இளமையாக காட்சியளிக்கும்.
மார்பக புற்றுநோய் தடுக்கும்
இதில் உள்ள வைட்டமின் சி சத்தும் வைட்டமின் ஈ சத்தும் ரத்தத்தில் கலந்து மார்பக புற்றுநோயை உண்டாக்கும் கிருமிகளை அழித்து இரத்தத்தை சுத்தமாக்குகிறது. இதனால் மார்பகப் புற்றுநோய் உண்டாகாமல் நீண்ட நாள் ஆரோக்யமாக வாழ முடியும்.
மலச்சிக்கலைப் போக்கும்
மலச்சிக்கல் உள்ளவர்கள் தினமும் ஒரு வேளை அல்லது இரண்டு வேளை ப்ளூபெர்ரி பழத்தை சாறாக்கி அருந்தலாம். அல்லது 2 கப் எடுத்து சாப்பிடலாம். இவ்வாறு எடுத்துக்கொள்வதால் மலச்சிக்கல் நீங்கி உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
சீதபேதி வராமல் தடுக்கும்
குழந்தைகளுக்கு அடிக்கடி சீதபேதி ஏற்பட்டால் 15 கிராம் அளவிற்கு உலர்ந்த ப்ளூபெர்ரி பழத்தை எடுத்து சூப் வைத்து கொடுத்தால் சீதபேதியை உண்டாக்கும் நுண்ணுயிரிகள் அழித்து விடுகிறது. இதனால் சீதபேதி குணமாகி விடுகிறது. பெரியவர்களுக்கு 25 கிராம் அளவிற்கு எடுத்துக்கொண்டு சூப் சாப்பிட்டால் போதும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu