/* */

இதய நோய் வருவதை தடுக்கும் பாகற்காய்..! கசப்புதான்..ஆனால் பலனோ இனிப்பு..!

Bitter Gourd in Tamil Name-ஆங்கிலத்தில் பாகற்காயை Bitter Gourd, Bitter Melon மற்றும் Bitter Squash என்று அழைக்கிறார்கள்.

HIGHLIGHTS

Bitter Gourd in Tamil Name
X

Bitter Gourd in Tamil Name

Bitter Gourd in Tamil Name-Bitter Gourd என்று அழைப்பதில் இருந்தே அதன் சுவையை அறியும் வகையில் ஆங்கிலத்தில் பெயர் வைத்துள்ளனர். இதன் பெயரிலேயே அதன் கசப்புச் சுவை தெரிந்துவிடும்.

பாகற்காய் அவைகள் வளரும் பிராந்தியத்திற்கு ஏற்ப கரும்பச்சை,அல்லது இளம்பச்சை நிறமாக இருக்கும். இதன் சுவை கசப்பாக இருந்தாலும், இதில் உடலுக்குத் தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும், வைட்டமின்களும் ஏராளமாக உள்ளன. பாகற்காயை ஜூஸ் எடுத்ததும் அருந்தலாம். மேலும் ஊறுகாய், பொரியல், வறுவல், தொக்கு, குழம்பு, கூட்டு என்று ஏராளமான உணவு வகைகளாக தயார்செய்து பயன்படுத்தலாம்.

வைட்டமின் ஏ, பி, சி, பீட்டா-கரோட்டின் போன்ற ஃப்ளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், மக்னீசியம் போன்ற தாதுக்கள் பாகற்காயில் நிறைந்துள்ளன.

Bitter Gourd in Tamil Name

சுவாசக் கோளாறு

பசுமையான பாகற்காய் ஆஸ்துமா, சளிப் பிடித்தல், இருமல் போன்றவற்றைத் தீர்ப்பதில் மிகச்சிறந்த நிவாரணியாகப் பயன்படுகின்றன.

கல்லீரல் வலுப்பெற

தினந்தோறும் ஒரு டம்ளர் பாகற்காய்ச் சாற்றினை அருந்தி வந்தால் ஈரல் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் நீங்கும். அதிலும் குறிப்பாக ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வந்தால், இதன் பலனைக் முழுமையாக காண முடியும்.

நோயெதிர்ப்புச் சக்தி

பாற்காயையோ, அதன் இலைகளையோ வெந்நீரில் வேக வைத்து தினந்தோறும் சாப்பிட்டு வந்தால், நோய்த்தொற்றுகள் பரவாமல் தடுக்கப்பட்டு உடலின் நோயெதிர்ப்புச் சக்தி கூடும்.

Bitter Gourd in Tamil Name

பருக்கள் நீங்க

பாகற்காயை சாப்பிட்டு வருவதால் சருமத்தில் உள்ள பருக்கள், கருப்புத் தழும்புகள், ஆழமான சருமத் தொற்றுகள் ஆகியவை நீங்கும். பாகற்காயை சாறு எடுத்து, அதனுடன் எலுமிச்சைச் சாற்றைக் கலந்து, தினந்தோறும் வெறும் வயிற்றில் 6 மாதம் அருந்தி வந்தால், அதன்பலன் முழுமையாகத் தெரியும்.

நீரிழிவு நோய் டைப் 2

நீரிழிவு நோயை (type 2 diabetes) எதிர்கொள்ள சிறந்த மருந்தாக பாகற்காய்ச் சாறு பயன்படுகிறது. பாகற்காயில் உள்ள ஒருவகை வேதிப்பொருள் இன்சுலின் போல செயல்பட்டு, இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.

கசப்பான தன்மையுள்ள பாகற்காயில் பல இரசாயனங்கள் உள்ளன. அவை இன்சுலின் போல செயல்படுகின்றன. மேலும் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகின்றன. சில ஆய்வுகள் செல்களில் அதிக குளுக்கோஸை நுழையச் செய்வதன் மூலம் சர்க்கரையை குறைக்கும் செயலை செய்வதாகக் கூறுகின்றன.

மலச்சிக்கல்

பாகற்காயில் நார்ச்சத்து மிகுந்துள்ளதால், அது செரிமானத்திற்கு மிகவும் உதவுகிறது. இதன் காரணமாக உணவு நன்றாக செரிக்கப்பட்டு, கழிவுகள் எளிதாக வெளியே தள்ளப்படுகிறது. இதன் மூலம் மலச்சிக்கல் தடுக்கப்படுகிறது. அதன்மூலம் சிரமமின்றி மலம் கழிக்க முடிகிறது.

Bitter Gourd in Tamil Name

சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை

ஆரோக்கியமான சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையைப் பேணுவதற்கு பாகற்காய் மிகவும் உதவுகிறது. சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்குவதற்கும் இது உதவுகிறது.

பெரும்பாலான சிறுநீரக கற்கள் கால்சியம் பாஸ்பேட் அல்லது கால்சியம் ஆக்சலேட்டின் கடினமான வடிவங்களாகும். கசப்புத் தன்மையுள்ள பாகற்காயில் உள்ள இயற்கையான இரசாயனங்கள் இயற்கையாகவே சிறுநீரக கற்களை உடைத்து உடலில் இருந்து அகற்ற உதவுகிறது.பாகற்காய் அதிக அமிலத்தை குறைக்கிறது. அமிலம் சுரப்பதாலேயே சிறுநீரக கற்கள் உருவாகின்றன. பாகற்காய் அமில சுரப்பைத் தடுத்து, சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கிறது.

இதய நோய்

பாகற்காயை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் நீக்கப்பட்டு, இதய நோய் எளிதில் வருவதைத் தடுக்கிறது. பாகற்காய் LDL எனப்படும் கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது. மேலும் மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. நார்ச்சத்து தமனிகளின் அடைப்பை நீக்கவும் உதவுகிறது.

Bitter Gourd in Tamil Name

புற்றுநோய்

புற்றுநோய் செல்கள் பல்கிப் பெருகுவதை பாகற்காய் தடுக்கிறது. சுருக்கமாக, பகற்காயில் உள்ள கசப்புத்தன்மை உடலில் உள்ள குளுக்கோஸ் மற்றும் கொழுப்பைக் கடத்தும் வளர்சிதை மாற்ற பாதைகளில் ஈடுபடும் சில மூலக்கூறுகளை சரிசெய்கிறது. அவை வாய்வழி புற்றுநோய் வளர்ச்சியை தடுப்பதற்கு முக்கிய இலக்குகளாக இருக்கின்றன. இதனால் புற்றுநோய் செல்கள் இறக்கின்றன.

எடை குறைதல்

உடலின் வளர்சிதை மாற்றத்தை சரிசெய்யும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் பாகற்காயில் நிறைந்துள்ளன. உடலின் செரிமான மண்டலத்தை நன்றாகத் தூண்டி, நல்ல செரிமானத்தை உண்டாக்குகிறது. இதனால், உடலுக்குத் தேவையான சத்துக்கள் உறிஞ்சப்பட்டு, வேகமாக உடல் எடையை குறைக்கிறது.

அதிகமாக உண்ணுதல் கூடாது

அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை போல் பாகற்காய் அதிகமாக சாப்பிடுவாதலும் பல பக்க விளைவுகள் ஏற்படும். இதனை மருத்துவ ஆய்வில் கூறியிருக்கிறார்கள். நீண்ட நாட்களாக அதிக அளவில் பாகற்காய் சாப்பிட்டால் கருசிதைவு,கல்லீரல் பாதிப்பு,ஒழுங்கற்ற இதய துடிப்பு போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 26 March 2024 9:20 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடே..நண்பா.. வாடா பிறந்தநாள் கொண்டாடலாம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைச் சோர்வில் இருந்து மீண்டு வர 9 வழிகள்
  3. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  5. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  6. வீடியோ
    மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை ! 50 ஆண்டுகள் பழமையான புளியமரம்...
  7. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா, என் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    என்னில் பாதியானவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 207 கன அடியாக அதிகரிப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!