முகத்தில் பருக்கள் இருக்கா..? கவலை வேண்டாம்..! இருக்கவே இருக்கு கடலை மாவு..!
Besan Powder Meaning in Tamil
Besan Powder Meaning in Tamil-அழகு என்றால் பல பெண்களுக்கு உடனே ஞாபகத்துக்கு வருவது கடலை மாவுதான். கடலை மாவிற்கு பொலிவிழந்த சருமத்தை இளமையூட்டும் தன்மை உண்டு. முக அழகு கூடுவதற்கு தினமும் கூட கடலை மாவு பயன்படுத்தலாம். நல்ல மாற்றம் கிடைக்கும். சிறிது கடலை மாவுடன் வெள்ளரி சாறு கலந்து நன்றாக குழைத்து கருமையாக உள்ள சரும பகுதிகளில் பூசினால் மாற்றம் தெரியும்.
இந்தியாவில் பொதுவாக அனைத்து வீடுகளிலும் காலை மாவு இருக்கும். பழங்காலம் தொட்டே இந்த கடலை மாவு அழகைப் பராமரிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடலை மாவு ஒருவரது அழகைப் பாதுகாக்க உதவுவதோடு, இயற்கையான ஆரோக்யத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. கடலைமாவு குறித்த நன்மைகளைப் பார்ப்போம் வாங்க.
கடலை மாவானது நன்கு உலர வைக்கப்பட்ட கொண்டைக்கடலைப் பருப்பைக் கொண்டு தயாரிக்கப்படுவதாகும். இந்த கடலை மாவு பல சுவையான மற்றும் மொறுமொறுப்பான பலகாரங்களைத் தயாரிக்கப் பயன்படுகிறது.
பலருக்கும் கடலை மாவு உடலுக்கு நல்லதா கெட்டதா என்ற எண்ணம் எழும். இதற்கு காரணம் கடலை மாவைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் பெரும்பாலும் எண்ணெயில் பொரிக்கப்படுவதால் தான். பொதுவாகவே எண்ணெயில் பொறிக்கப்படும் உணவுகளில் கொழுப்பு இருக்கும் என்பதால்தான் இந்த அச்சம் எழுகிறது.
மற்றபடி கடலை மாவு உடல் ஆரோக்யத்திற்கு மிகவும் சிறப்பானது. அதுவும் கடலை மாவில் உடல் ஆரோக்யத்தை மேம்படுத்தத் தேவையான பல முக்கிய சத்துக்கள் நிறைந்துள்ளன.
சரும மென்மைக்கு
கடலை மாவு சரும ஆரோக்யத்திற்கு அழகு தரக்கூடியவை. ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் கடலை மாவை எடுத்துக்கொண்டு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பின்னர் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதையும் நன்றாக கலக்கி முகத்தில் பூசி அரை மணி நேரம் வைத்திருக்கவேண்டும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவி வந்தால் சருமம் மென்மையாகும். அப்டியே பஞ்சுபோல மாறும். குழந்தைகளுக்கும் சோப்புக்கு மாற்றாக கடலை மாவு பயன்படுத்தினால் குழந்தையின் சருமமா பொலிவு பெறுவதுடன் மென்மையாகவும் இருக்கும்.
'பளிச்' தோற்றத்திற்கு
அழகை பேணிக்காப்பதில் கடலை மாவு முக்கிய பங்கு வகிக்கிறது. பொலிவிழந்த சருமத்தை இளைமையூட்ட இரண்டு ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளுங்கள். பின்னர் முகத்தில் நன்றாக தடவி ஊற விடுங்கள். நன்றாக உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் 'பளிச்' என்று தோற்றமளிக்கும். நீங்களே இது உங்கள் முகமா என்று ஆச்சரியப்படுவீர்கள்.
குளியலில்
குளிக்கும் போது கடலை மாவு பூசி குளித்தால் முகம் வழுவழுப்பாகும். சருமத்தில் சுருக்கம் ஏற்படாது. இளமை அப்படியே இருக்கும். அதற்கு இரண்டு ஸ்பூன் கடலை மாவுடன், 2 ஸ்பூன் ரோஸ்வாட்டர், 4 ஸ்பூன் பால் சேர்த்து நன்றாக கலக்கி, பின்னர் முகத்தில் பூச வேண்டும். பூசும்போது மேல்நோக்கி பூசினால் சரும துளைகளில் கடலைமாவு நன்றாக இறங்கி நிற்கும். 10 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் சருமம் மென்மையாக இருக்கும். கோடை வெயிலில் சென்றாலும் முகம் கருக்கவே கருக்காது.
எண்ணெய் பசை சருமம்
சிலருக்கு சருமத்தில் எண்ணெய் வழிந்து பிசு, பிசுப்பாக இருப்பது போலவே இருக்கும். அதற்கு கடலை மாவுடன் தயிர் சேர்த்து பேஷியல் செய்தால் முகம் அழகுடன் பொலிவு பெறும். அதற்கு ஒரு கிண்ணத்தில் கடலை மாவை எடுத்து அதில் தயிர் , எலுமிச்சை சாறு பிழிந்து நன்றாக கலந்து முகத்தில் தடவ வேண்டும். சில நிமிடங்கள் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் எண்ணெய் பசை நீங்கி முகம் பொலிவு பெறும்.
சோர்வு
சிலருக்கு முகம் எப்போதும் சோர்ந்து வாடிப்போய் இருப்பதுபோலவே இருக்கும். அப்படியான சோர்வான முகத்துக்கும் கடலை மாவு உதவும். தோலுடன் இருக்கும் அரை கிலோ கடலை பருப்பு, துளசி இலை 50 கிராம், வேப்பங்கொழுந்து 5 கிராம் அளவு இவைகளை நிழலில் உலர்த்தி, நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.
ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் அரைத்த பொடியை போட்டு அதில் இரண்டு துளி எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் பூசி ஐந்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் முகம் பொலிவாக மாறும். சோர்வவாக இருந்த முகம் தெளிவாகிவிடும். வாரம் ஒரு முறை செய்தால் பளபளப்பு பெற்று முகம் பிரகாசமாக இருக்கும். அப்புறம் உங்கள் பிரெண்ட்ஸ் எல்லோரும், டீ..எப்படிடி இப்படி ஆன என்று கேட்பார்கள். அவர்களுக்கும் இந்த டிப்ஸை சொல்லுங்கள்.
கோடை வெயில் கருமை நீங்க
வெயிலில் அடிக்கடி செல்பவர்களுக்கு குறிப்பாக கோடை வெயிலில் சூரிய ஒளி பட்டு முகம் கருப்பாகும். அதற்கு தேங்காய்ப் பால் 1 ஸ்பூன், கடலை மாவு ஒரு ஸ்பூன் எடுத்து இரண்டையும் கலந்து பசை போல பிசைந்து, பின்னர் முகத்தில் பூச வேண்டும். உலர்ந்ததும் கழுவ வேண்டும். வாரம் இரண்டு முறை இப்படி செய்தால் முகம் பிரகாசமாக இருக்கும். வெயிலின் கருமை படியாது.
கடலைமாவு மஞ்சள்
நமது முதியோர் காலத்திலிருந்து பாரம்பரியப் பொருளாக பயன்படுத்தப்பட்டுவரும் ஒரு பொருள் கடலைமாவு. அதேபோலவே மஞ்சளும் நமது பாரம்பர்ய பொருளே. இரண்டுமே உடல் ஆரோக்யத்திற்கும், சரும ஆரோக்யத்திற்கும் அழகு தரக்கூடியவை.
ஒரு கிண்ணத்தில் 2ஸ்பூன் கடலைமாவை எடுத்துக் கொண்டு ஒரு சிட்டிகை அளவு மஞ்சள்தூள் சேர்த்து கலந்துகொள்ளுங்கள். சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து அதை முகத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவுங்கள். சருமம் மென்மையாகும்.
உருளைக்கிழங்குடன் கடலை மாவு
உருளைகிழங்குச் சாறுடன் கடலை மாவை சேர்த்து முகத்தில் தேய்த்து வர முகம் பொலிவு பெறும். பியூட்டி பார்லரில் ஃபேசியல் செய்தது போலென்ற அனுபவத்தை தரும். பணத்தைக்கொடுத்து செய்வதைவிட இது எளிமையான சிக்கன வழி. இந்த முறையை செய்து பாருங்கள் பெரிய பலன் கிடைக்கும்.
முகப் பரு
சிலரது முகத்தில் பருக்கள் அதிகம் இருக்கும். அத்தகைய முகப்பருக்களை போக்குவதற்கு கண்டதையெல்லாம் பயன்படுத்தி பார்த்திருப்பார்கள்.ஆனாலும் அந்த பரு மாறி இருக்காது. ஆனால் கடலை மாவில் சிறிது சந்தனப் பவுடர், மஞ்சள் தூள் மற்றும் பால் சேர்த்து பேஸ்ட் தயார் செய்து, முகத்தில் நன்றாக பூசி ஒரு 20 நிமிடம் ஊற வைத்து கழுஉங்கள். நல்ல பலன் கிடைக்கும். இதை வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால் பருக்கள் பயந்து ஓடும்.
மூட்டுகளில் கருமை
சில பெண்களுக்கு முழங்கை மற்றும் கழுத்துகளில் கருமை படிந்து இருக்கும். இதைப்போன்ற கருமையைப் போக்குவதற்கு, ஒரு அருமையான மாஸ்க் கடலை மாவு மாஸ்க் தான். அதற்கு கடலை மாவுடன் தயிர், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து கருமையாக உள்ள இடங்களில் தடவி, 30 நிமிடம் ஊற வைக்கவேண்டும். பின்னர் நல்ல நீரில் கழுவி, நல்லெண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால், கருமை போயே போச்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
Tags
- Besan Flour in Tamil
- Besan Powder Meaning in Tamil
- Basin Powder Meaning in Tamil
- Besan Powder in Tamil
- what is besan flour in tamil
- besan gram flour in tamil
- besan flour in tamil name
- how to make besan flour in tamil
- besan in tamil
- besan flour in tamil
- besan meaning in tamil
- gram flour in tamil meaning
- besan tamil name
- kadalai maavu in tamil
- gram flour face pack in tamil
- kadalai maavu face pack in tamil
- flour in tamil
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu