தொப்புளில் எண்ணை போடுங்கள்..! அடடா..நன்மைகள்..!

பைல் படம்
நமது தொப்புள் (நாபி) கடவுள் மூலம் நமக்கு வழங்கப்பட்ட ஒரு அற்புதமான பரிசு.
பம்பரம் விடுவது, ஆம்லெட் போடுவது என தொப்புள் பகுதி ஒரு கவர்ச்சிக்காகவும், திரைக்கதைகளுக்காகவும் காண்பிக்கப்பட்டாலும் ஒரு மனிதனின் உடம்பில் நமது தொப்புள் நிச்சயமாக ஒரு அற்புதமான விஷயம் தான். தொப்புளில் எண்ணெய் வைப்பதால் உடல் நலம் மேம்படும், நம் உடலில் அனைத்து நோய்களும் தீர்க்கப்படும.
அந்த காலம் முதலே தூங்குவதற்கு முன்பு, நம்முடைய வயிற்றில், தொப்புள் பகுதியில் எண்ணெயை தடவிக் கொண்டு தூங்குவது என்பது ஒரு வழக்கமாகவே இருந்து வந்திருக்கிறது.. இதனால், நமது உடலுக்கும் பலவித நன்மைகளும் கிடைத்திருக்கின்றன. இதை நவீன மருத்துவமும் நிரூபித்துள்ளது.
இன்றைய வாழ்க்கை முறையால் பல பிரச்சனைகள் நம்மை வாட்டி வதைக்கிறது. அவற்றைத் தவிர்க்க, நாம் பல்வேறு நடவடிக்கைகளைத் தேடுகிறோம். ஆனால், தொப்புள் தொடர்பான இந்த வைத்தியங்களை முயற்சிப்பதன் மூலம் உடல்நலம் தொடர்பான பல பிரச்சனைகளை நீங்கள் சமாளிக்க முடியும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
"எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வது நரம்பு மண்டலத்தை மேம்படுத்துகிறது, இது நோய்களைத் தடுக்கிறது மற்றும் உடல் ஆரோக்கியமாக இருக்கும்" என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். நம் உடலின் அனைத்து நரம்புகளின் மைய புள்ளியாக, நம் தொப்புள் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர, உடலின் சக்கரம் தொப்புளிலிருந்து தொடங்குகிறது என்று ஆயுர்வேதத்தில் நம்பப்படுகிறது. 72 ஆயிரம் நரம்புகளின் மையப்புள்ளி தொப்புள். தொப்புளில் எண்ணெய் பயன்படுத்துவதன் மூலம் பல உடல்நலப் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.
அறிவியல் படி, கரு வளரும் பொழுது முதலில் தொப்புள் பகுதி உருவாக்கப்படுகிறது. பிறகு, அது தொப்புள் கொடி மூலம் தாயின் நஞ்சுக்கொடியுடன் இணைகிறது.
ஒரு பெண் கருத்தரிக்கும் போது, உணவு பொருட்கள் தாயின் தொப்புள் மூலம் குழந்தையை அடைகிறது. தொப்புளில் எண்ணெய் வைப்பது கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு, பித்த வெடிப்பு, கணையம் பிரச்சினைகள் குணமாகி பளபளப்பான முடி, ஒளிரும் உதடுகள் கிடைப்பதுடன், முழங்கால் வலி, உடல் நடுக்கம், சோம்பல், மூட்டு வலிகளை எதிர்கொள்ளவும் உதவுகிறது.
பாத வெடிப்புகள்: பாத வெடிப்புகளுக்கும், சரும பிரச்சனைகளுக்கும் முக்கிய காரணமே உடல்சூடுதான். தொப்புளில் ஒருதுளி எண்ணையை வைத்தால், பாத வெடிப்பு குறையும். சருமம் பொலிவாகும். வறட்சி மறைகிறது. தலைமுடி ஆரோக்கியமாக வளரும். நம் தொப்புளில் ஏதாவது நரம்புகள் துவண்டு போயிருந்தால், நாம் விடும் எண்ணெய் தொப்புளில் உள்ள நரம்புகள் வழியாக சென்று அவற்றை வலுப்படுத்தும்.
இதனால் சீரான ரத்தம் பாய்ந்து உடல் உறுப்புகளை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. முழங்கால் மூட்டு வலிகள் இருப்போரும், தொப்புளில் எண்ணெய் விடுவதால் தீர்பு கிடைக்கும். அதேபோல, கால் நரம்புகளில் வலி இருந்தாலும் அவை நீங்கும். மூட்டு, கால் வலிகள் குணமாகும். உடல் நடுக்கம், சோர்வு கணைய பாதிப்புகளுக்கு அருமருந்தாகிறது. கர்ப்பப்பை வலுப்பெறுகிறது.. இரவில் நல்ல தூக்கம் வரும்.
நல்லெண்ணெய்:
நல்லெண்ணெய் ஆயுர்வேதத்தில் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இதன் மூலம் ஆரோக்கியம் தொடர்பான பல பிரச்சனைகளை சமாளிக்கலாம். மூட்டு வலியைப் போக்கவும் உதவுகிறது. மூட்டு வலியால் அன்றாடப் பணிகளைச் செய்வதில் சிரமம் ஏற்படுகிறது. இந்த வழக்கில், நீங்கள் எள் எண்ணெய் பயன்படுத்தலாம். இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது, இது மூட்டு வலியை நீக்குகிறது மற்றும் எலும்புகளை வலுப்படுத்துகிறது. மூட்டு வலி நீங்க வேண்டுமானால், இரவில் தூங்கும் முன் சில துளிகள் எள் எண்ணெயை தொப்புளில் போடுங்கள்.
கடுகு எண்ணெய்:
கடுகு எண்ணெய் சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது. சிலர் கடுகு எண்ணெயை மசாஜ் செய்வதன் மூலம் முடியின் அடர்த்தி மற்றும் வளர்ச்சி அதிகரிக்கும். ஆனால் குடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அகற்ற கடுகு எண்ணெய் சிறந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா? மேலும், இது ஈரப்பதமூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளது. இது உலர்ந்த உதடுகளின் பிரச்சனையை நீக்குகிறது. இரவில் தூங்கும் முன் 2 சொட்டு கடுகு எண்ணெயை தொப்புளில் போடலாம்.
இந்த எண்ணெய்களைத் தவிர, தேங்காய் எண்ணெய் கருவுறுதலை மேம்படுத்துகிறது மற்றும் இஞ்சி எண்ணெய் வயிற்று வலி , வீக்கம், குமட்டல் மற்றும் செரிமான பிரச்சனைகளை குணப்படுத்தும். இந்த பிரச்சனைகளை தவிர்க்க தொப்புளில் இந்த எண்ணெய்களை பயன்படுத்தலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu