அஸ்வகந்தாவை 'மூலிகை வயாக்ரா' என்று ஏன் அழைக்கிறார்கள்..? தெரிஞ்சுக்கங்க..!
Withania Somnifera in Tamil
Withania Somnifera in Tamil
அஸ்வகந்தா செடியின் முழு பாகமும் மருத்துவப் பயன்களைக் கொண்டது. வட மொழியில்தான் அதன் பெயர் அஸ்வகந்தா. தமிழில் அதன் பெயர் அமுக்கிரா எனப்படுகிறது. இதில் இரன்டு வகைகள் உள்ளன. ஒன்று சீமை அமுக்கிரா இன்னொன்று நாட்டு அமுக்கிரா. ஆனால் சீமை அமுக்கிரா சிறந்தது என்று பாரம்பரிய மருத்துவம் கூறுகிறது. அமுக்கிரா தாவரத்தில் இலை, கிழங்கு அதன் பழம் போன்றவை மருத்துவத்தில் பயன்படுகின்றன.
மூலிகை வயாக்ரா
'மூலிகை வயாக்ரா' என்று இதற்கு இன்னொரு பெயரும் உண்டு. இதனுடன் வேறு சில மூலிகைகள் கலந்து உண்பதன் மூலமாக தாம்பத்ய உறவு சிறப்பாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதனால்தான் இது மூலிகை வயாக்ரா என்று அழைக்கப்படுகிறது.
அஸ்வகந்தா என்பது மூலிகை மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு செடி வகையைச் சேர்ந்த தாவரமாகும். இந்த செடியின் வேர்(கிழங்கு),இலை மற்றும் அதன் பழம் போன்றவை மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. அஸ்வகந்தாவிற்கு அசுவகந்தி, அமுக்குரவி, அமுக்கிரி, அசுவம், ஆசிவகம், இருளிச்செவி, வராககர்ணி இப்படி பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.
Withania Somnifera in Tamil
தூக்கமின்மை
அஸ்வகந்தாவில் மன அழுத்தத்தைக் குறைக்கும் அதீத சக்தி உள்ளது. பதற்றத்தினாலும், மன அழுத்தத்தினாலும் மனச்சோர்வு, உடல் சோர்வு ஏற்படும். அந்த சோர்வினை நீக்கி புத்துணர்ச்சியை அளிப்பதில் அசுவகந்தா பயனாகிறது. இதிலுள்ள அடோப்டோஜினிக் மற்றும் ஊட்டச்சத்து சார்ந்த பண்புகள் மனச்சோர்வை குறைப்பதில் பங்குவகிக்கின்றன.. இதனால் மன அழுத்தம் குறைந்து நிம்மதியான உறக்கத்தைத் தருகிறது.
நீரிழிவு குறைபாடு
சர்க்கரை குறைபாடு உள்ளவர்களுக்கு இன்சுலின் சுரப்பி அதிகரிக்க, இந்த அஸ்வகந்தா கிழங்கு பயனுள்ளதாக இருப்பது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமல்லாமல், ஆரோக்யமாக இருப்பவர்களுக்கும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி சீராக வைப்பதற்கான ஆற்றலும் உள்ளது.
Withania Somnifera in Tamil
மூட்டு வலி
30 வயதைத் தாண்டிவிட்டாலே மூட்டு வீக்கம், மூட்டுகளில் வலி என்று பெருமூச்சு விடுகின்றனர். இப்படி பாதிக்கப்பட்டவர்கள் அஸ்வகந்தாவை பயன்படுத்தினால் மூட்டில் உள்ள வலி குறைவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆயுர்வேதத்தில் கீழ்வாதம், குடல் மற்றும் உடலின் செரிமான அமைப்பிற்கு நம் உடலில் உள்ள பீட்டா சத்தின் ஏற்றத்தாழ்வு மூலம் ஏற்படுகிறது. இந்த அஸ்வகந்தா விற்கு பீட்டா சத்தினை அதிகரிக்கும் பண்பு உள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி
அஸ்வகந்தாவை “மைடேக் காளான் சாறு” உடன் சேர்த்து பயன்படுத்தினால் நமக்கு ஏற்படும் நோய் தொற்றிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். ஜலதோஷம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு அஸ்வகந்தாவை தேநீருடன் சேர்த்து வடிகட்டி குடித்து வந்தால் ஜலதோஷம் சரியாகும்.
Withania Somnifera in Tamil
தைராய்டு
உடலில் சுரக்கும் ஜி4 ஹார்மோன் சுரப்பு குறைந்தால் தைராய்டு பிரச்னை ஏற்படுகிறது. ஜி4 ஹார்மோன் சுரப்பதற்கு அஸ்வகந்தா தூண்டுகிறது என்பது ஆராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டுள்ளது. தைராய்டு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண நிபுணர்கள் ஆராய்ச்சிகள் செய்து வருகின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu