மாதவிடாய் கால வலியைக்குறைக்கும் வெள்ளைப்பூசணி சாறு..! பெண்களே தெரிஞ்சுக்கங்க..!

Wax Gourd in Tamil
Wax Gourd in Tamil-ஆங்கிலத்தில் ash gourd என்று அழைக்கப்படும் வெள்ளைப் பூசணி சாம்பல் பூசணி என்றும் அழைக்கப்படுகிறது. அதன் மேற்புறத்தில் சாம்பல் போன்ற துகள்கள் படிந்திருப்பதால் அது சாம்பல் பூசணி என்று அழைக்கப்படுகிறது.
வெள்ளைப் பூசணியில் வைட்டமின் பி, சி, கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்தும் வளமாக நிறைந்துள்ளன. முக்கியமாக இதில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது.

பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க மிகவும் உதவுகிறது. புண் ஆறுவதற்கு , தழும்புகளை மறையச் செய்வதிலும் பூசணிக்காய் பயன்படுகிறது. பூசணிக்காயை அடிக்கடி உணவில் சேர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியை தக்கவைக்கும் பண்பும் கொண்டது. பூசணிக்காயை அடிக்கடி விரும்பி சாப்பிடுபவர்களுக்கு கண் பார்வை தெளிவாக இருக்கும்.
வெள்ளைப்பூசணிச் சாறு குடிப்பதால் ஏற்படும் பயன்கள்:

வலிப்பு நோய்
இரத்த சுத்திக்கும், இரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் உதவும். நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் நீக்கப் பயன்படுகிறது.
அல்சர்
அல்சர் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு வெள்ளை பூசணி சாறு உடனடி பலனைத் தரும். அதுமட்டுமின்றி, அதிக காரமான உணவுகள் மற்றும் நீண்ட நேரம் உணவு உட்கொள்ளாமல் இருந்தால் ஏற்படும் அசிடிட்டி பிரச்சனையை எதிர்த்துப் போராடவும் வெள்ளை பூசணி சாறு உதவும்.

புழுக்கள் வெளியேற
தினமும் காலையில் வெள்ளை பூசணி சாறுடன் தேன் கலந்து குடித்து வந்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேற்றப்பட்டு, வயிற்றில் தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
எடை குறையும்
வெள்ளை பூசணி சாறை தினமும் காலையில் குடித்து வாருங்கள். இதில் கலோரிகள் மிகவும் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இதனால் எடை குறைவதோடு, உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றிவிடும்.
உடற்சூடு தணியும்
உடல் சூட்டினால் கஷ்டப்படுபவர்கள், வெள்ளைப் பூசணி சாறை குடித்து வந்தால், உடல் சூடு தணியும். அதுமட்டுமின்றி, உடலில் நீர்ச்சத்து அதிகரித்து, உடல் குளிர்ச்சியுடன் இருக்கும்.
வெள்ளை பூசணி சாற்றில் தேன் கலந்து தினமும் காலை, மாலை என இருவேளையில் குடித்து வந்தால், இரத்தம் சுத்தமாகும். உடலில் இரத்தம் சுத்தமாக இருந்தால், எவ்வித நோய்த்தொற்றுகளும் ஏற்படாமல் தடுக்கலாம்.

இரத்தக்கசிவு
சிறுநீரகத்தில் தொற்று ஏற்பட்டு, சிறுநீருடன் இரத்தம் வெளிவருவது, அல்சரினால் உடலினுள் இரத்தக் கசிவு ஏற்படுவது, பைல்ஸ் போன்றவற்றினால் ஏற்படும் இரத்தக்கசிவு போன்றவற்றிற்கு வெள்ளை பூசணி சாறு நல்ல பலனைத் தரும்.
சிறுநீரக நோய்
சிறுநீரகம் சம்பந்தமான நோய் உள்ளவர்கள் பூசணிக்காய்ச் சாறு 120 மில்லியில் ஒரு தேக்கரண்டி சர்க்கரை அல்லது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், நோய்கள் முழுமையாக குணமாகும்.
சர்க்கரை நோய்
சர்க்கரை நோயாளிகள், வெள்ளைப்பூசணி சாரில் உப்பு மற்றும் சீரகத்தூள் கலந்து பருக வேண்டும். பூசணி விதையில் உள்ள துத்தநாகச் சத்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இந்த விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் ஆண்மையின்மை பிரச்னையை தீர்க்கிறது.
பெண்களுக்கு பயன்தரும்
பெண்கள், பூசணி விதையை நெய்யில் வறுத்து தினமும் சாப்பிட்டு வந்தால், மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலி மற்றும் வெள்ளைப்படுதல் போன்ற பிரச்னைகள் குணமாகும். பூசணி விதையில் கஷாயம் செய்து குடித்தால், வயிற்றில் உள்ள பூச்சிகள் நீங்கும்.
புற்றுநோய்
பூசணி விதையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்டுகள், நமது உடம்பில் ரசாயன தாக்கத்தை தடுத்து, ஹார்மோன் மற்றும் நாளமில்லா சுரப்பிகளை கட்டுப்படுத்தி, புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது.
உடற்பயிற்சி செய்வதில்
உடற்பயிற்சி செய்துவிட்டோ அல்லது அதற்கு முன்பாகவோ சாப்பிடும் உணவில் பூசணிக்காய் சேர்த்துக்கொள்வது நல்லது.ஏனெனில் எலெக்ட்ரோலைட் சமநிலைக்கு, பூசணிக்காய் பெரிதும் உதவுகிறது. காய்ச்சல் மற்றும் சளியை குணப்படுத்தவும் பூசணி மிகவும் ஏற்றது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu