asafoetida in tamil-பெருங்காயத்தில் இம்புட்டு நன்மைகளா..? நீங்களும் தெரிஞ்சுக்கங்க..!
asafoetida in tamil-சாதாரணமாகவே நமது வீடுகளில் பெருங்காயம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரசம் என்றால் பெருங்காய வாசனை இருந்தால் ஒரு கவளம் சோறு கூடுதலாக இறங்கும்.
HIGHLIGHTS

asafoetida in tamil-பெருங்காயம்.(கோப்பு படம்)
asafoetida in tamil-பெருங்காயம் என்பது ஒரு பூண்டுத்தாவரம். மானாசியஸ், அம்பெல்லிபெரேயே குடும்பத்தின் வகையைச் சேர்ந்த செடி.இது அபியாசேயே என்றும் அழைக்கப்படுகின்றது. இச்செடி 30-40 செ. மீ சுற்று வட்ட அளவில் இலைகளுடன் 2 மீட்டர்கள் வரை உயரம் வரை வளர்கின்றது. தண்டு இலைகள் அகன்ற அடிப்பகுதியைக் கொண்ட காம்புகளைக் கொண்டுள்ளன.
ஈரான், துருக்கி, ஆப்கானிஸ்தான் மற்றும் அரேபிய வளைகுடா நாடுகளில் தான், பெருங்காய மரங்கள் அதிகமாக விளைகின்றன. 2 - 3 மீ., நீளத்துக்கு சிறிய மரங்களாக வளரும் இவற்றின் தண்டு, வேரை கீறி, அதில் வடியும் பிசினை பக்குவப்படுத்தி காய வைத்தால், அது தான் பெருங்காயம். இதில் வெண்மை நிறப் பெருங்காயம் பால் பெருங்காயம் எனப்படுகிறது.
asafoetida in tamil
புரதச் செறிவு
பெருங்காயத்தில் நிறைய மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளன. பெருங்காயத்தில் புரதச்சத்து அதிகம் உள்ளது. சைவ உணவு உண்பவர்கள் தினசரி சமையலில் பெருங்காயம் சேர்த்துக் கொள்வதன் மூலம் புரதச்சத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
நரம்புக் சம்பந்தமான பிரச்னைகளுக்கு பெருங்காயம் நல்ல மருந்தாக இருக்கிறது. சமையலில் பெருங்காயத்தை அதிகம் சேர்த்துக் கொண்டால் அது நரம்புகளையும், மூளையையும் இயல்பாக்கி பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கக் கூடியது.
asafoetida in tamil
பல் வலி, வாதம், கபம்
பல் வலி அதிகமானால் பெருங்காயப் பொடியை வாணலியில் போட்டு வறுத்து, வலி உள்ள சொத்தைப் பல்லின் குழிப் பகுதியில் வைத்துக் கடித்துக் கொண்டால், பல்வலி நொடியில் பறந்துவிடும்.
உடலில் வாதத்தன்மையையும்,கபத்தையும் சமநிலைப்படுத்தும் ஆற்றல் பெருங்காயத்துக்கு உண்டு. உடலில் உள்ள நச்சுகளை, அழிக்கும் ஆற்றலும் உள்ளது. மலச்சிக்கல் பிரச்னைக்கு நல்ல தீர்வளிக்கும். ஆனால் , பெருங்காயம் அளவொடுமட்டுமே பயன்படுத்தவேண்டும். அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் உடலில் பித்தம் அதிகமாகிவிடும்.
மூச்சுத்திணறல், வாயுத்தொல்லை
ஆஸ்துமாவால் மூச்சுவிட முடியாமல் இருப்பவர்கள் பெருங்காயப் பொடியை சாம்பிராணி போடுவதுபோல நெருப்பில் போட்டு, அந்த பெருங்காயப் புகையை சுவாசித்தால் மூச்சுத் திணறல் நின்றுவிடும்.
வாயு பிரச்னைகளுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. நரம்பு சம்பந்தமான தலைவலி மற்றும் நோய்களுக்கும், இருமலுக்கும் சிறந்த நிவாரணியாக விளங்குகிறது.
உதிரப்போக்கு
பிரசவம் ஆன பெண்களுக்கு, பிரசவத்திற்குப் பின்னர் சில நாட்களுக்கு உதிரப்போக்கு இருக்கும். அந்த நேரத்தில் அவர்களுக்கு, வாணலியில் பெருங்காயத்தை வறுத்து, அத்துடன் சிறிது கருப்பட்டி, இஞ்சிச்சாறு மற்றும் பூண்டு சேர்த்து, சாப்பிடக் கொடுப்பார்கள். இதனால், அவர்களின் உதிரபோக்கு படிப்படியாக குறையும்.
asafoetida in tamil
வயிறு வலி
பெருங்காயத்தை தினமும் உணவுடன் சேர்த்து வந்தால் வயிற்று வலி, வயிறு உப்பிசம் போன்ற தொல்லைகள் இருக்காது. மலச்சிக்கலை நீக்கி, குடல்புழுக்களை அழிக்கும் அற்புத சக்தி வாய்ந்தது.
அதென்ன கூட்டுப்பெருங்காயம்..?
பொதுவாகவே கூட்டுப் பெருங்காயம் என்று அழைக்கப்படுவதற்கு காரணம், பெருங்காயத்தை அப்படியே நேரடியாக பயன்படுத்தினால் அதன் வீரியம் அதிகம். அதனால், அந்த வீரியத்தை மட்டுப்படுத்துவதற்காக கருவேலம் பிசின் மற்றும் கோதுமை சேர்க்கப்படுகிறது. அவ்வாறு சேர்க்கப்பட்ட பெருங்காயம் கூட்டுப்பெருங்காயம் என அழைக்கப்படுகிறது.