Ammikal Benefits in Tamil-அம்மி ; மறக்க முடியாத பழமை..! சமையல்கட்டின் ராணி..!

Ammikal Benefits in Tamil-அம்மி ; மறக்க முடியாத பழமை..! சமையல்கட்டின் ராணி..!
X

ammikal benefits in tamil-அம்மி பயன்பாடு (கோப்பு படம்)

தமிழர்களின் சமையல் அறையில் இருக்கும் விறகு அடுப்பு, அம்மி, ஆட்டுக்கல், திருகைக்கல், மண்பானை இவையெல்லாம் பாரம்பரியத்தின் அடையாளங்கள்.

Ammikal Benefits in Tamil

அம்மி அன்றைய கால கட்டத்தில் மிக முக்கியமான சமையலைறை பொருளாக இருந்தது. இன்றும் சில இடங்களில் காணக்கூடியதாக உள்ளது. இது மட்டுமில்லாமல் ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கும் பரியார்களும் இதை பாவித்தார்கள். கருங்கல்லினால் ஆக்கப்படும் அம்மி தட்டையாக இருக்கும் அதேவேளை இதில் அரைப்பதிற்கு ஏதுவான உருளை வடிவான குளவியும் காணப்படும்.


குளவியின் இருபக்கமும் இரு கைகளால் பிடித்து இடித்தும் இழுத்தும் அரைப்பதன் மூலம் தேவையான பொருட்களை ஆக்கக்கூடியதாக உள்ளது. குறிப்பிட்ட காலம் பயன்படுத்தும் போது இதில் தேய்வுகள் ஏற்பட்டு அரைக்கும் திறன் குன்றும். அதன் போது அம்மி பொளிபவர்களால் அம்மியும் குளவியும் ஒரு ஒழுங்கு முறைப்படி பொளியப்படும்.

திருமண பந்தங்களின் போது அம்மி மிதித்தல் என்பது இன்று வரை நமது கலாசாரத்தில் உள்ள ஒரு சடங்காக உள்ளது. இதன் பொருள் பெண்ணின் கழுத்தில் மங்கல நாண் சூடிய கணவன் மணப்பெண்ணைப் பார்த்து, இனி நான் உனது உயிர் மூச்சாகவும் கல்லைப் போல் உறுதியாகவும் இருந்து உன் வாழ்க்கைக்கு வழி காட்டுவேன் என்பதை வசிஷ்ட மகரிஷியின் சாட்சியாக உன் காலை அம்மி மீது வைத்து அதன் சாட்சியாக உன் காலில் மெட்டியைச் சூட்டுகின்றேன் என்று கூறுகின்றான். அதேபோல் மணப்பெண் கற்பில் கல்லைப்போல் உறுதியானவள் என்று எடுத்துரைக்கவும் இந்த சடங்கு நடைபெறுகிறது.


Ammikal Benefits in Tamil

அம்மி காய்கறி குழம்பு மற்றும் அசைவ உணவுகள் வைப்பதற்கான மசாலா அரைப்பதற்கும், துவையல் அரைப்பதற்கும், பேறுகால (குழந்தைப் பெற்றப் பெண்களுக்கு அப்போது 40 நாட்களுக்கு பல பொருட்கள் சேர்த்து தயாரித்து கொடுக்கப்பட்ட மருந்து) மருந்து அரைப்பதற்குமாகப் பயன்பட்டது.

அம்மியில் அரைத்து சமைக்கும் மசாலா உணவு தனிச்சுவையாக இருக்கும். நினைத்தாலே வாய் ஊறும். அதற்கென தனி சுவையும் மணமும் இருக்கும். தற்போது நவீனத்துவம் என்கிற பெயரில் மிக்சியில் அரைத்தால் அதில் எதிர்பார்க்கும் சுவையும் மணமும் கிடைப்பது அரிதுதான்.

Ammikal Benefits in Tamil


இப்போது அம்மி, ஆட்டுக்கல், திருகைக்கல் எல்லாம் கண்டுகொள்ளப்படாத தாத்தா, பாட்டிகள் போல வீடுகளின் கழிவுப் பொருட்களோடு குப்பையாக கிடக்கிறது, அவை வாழ்ந்த காலத்தை நினைத்தபடி.

அம்மிக்கல் அல்லது ஆட்டுக்கல் பயன்படுத்துவதால் அது உடலுக்கு உடற்பயிற்சி ஆகிறது. இதன் மூலமாக கொழுப்பு படிப்படியாகக் குறையத் தொடங்குகிறது. இதனால் உடல் தேவையில்லாமல் குண்டாகாது. உடல் ஆரோக்யமாக இருக்கும்.


அம்மி, ஆட்டுக்கல், திருகைக்கல் போன்ற பயன்பாடுகளின் காலகட்டத்தில் யாருக்கும் சுகர் கிடையாது, ப்ரெஷர் கிடையாது. ஆரோக்யமான உடலுடன் ஆண்களும் பெண்களும் இருந்தார்கள். பெண்கள் கிணற்றில் தண்ணீர் இறைப்பதே ஒரு ஆரோக்யமான பயிற்சிதான். உடல் உழைப்பு இருந்தது. அதனால் ஆரோக்யமும் இருந்தது.

மீண்டும் பழமையை நோக்கி பயணிக்கும் காலம் விரைவில் வரும்.

Tags

Next Story