ajwain seeds in tamil-பெண்களுக்கு முடி உதிர்வை தடுக்கும் ஓமம்..! எப்டீன்னு தெரிஞ்சுக்கங்க..!
ajwain seeds in tamil-ஓமத்தை ஒரு துணியில் கட்டி மூக்கில் நுகர்ந்தால், மூக்கில் நீர் ஒழுகுதல், சளி, மூக்கடைப்பு ஆகியவை குணமடையும்.
HIGHLIGHTS

ajwain seeds in tamil-ஓமம் பயன்பாடுகள் (கோப்பு படம்)
ajwain seeds in tamil-ஓமம் என்பது ஒரு மருத்துவ மூலிகையாகும். பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டிருப்பதால் இது வணிக நோக்கில் வளர்க்கப்படுகிறது.
கர்ப்பகால கோளாறுகள்
கர்ப்பகாலத்தில் ஏற்படும் அஜீரண கோளாறுகளை சரி செய்வதற்கு ஓமத்தை தாராளமாக பயன்படுத்தலாம். வாய்வு, வயிற்று வலி ஆகிய உடல் உபாதைகளுக்கு ஓமத் திரவம் அற்புதமாக வேலை செய்யும் மருந்தாகும்.
சத்து
ஓமத்தில், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தையாமின், ரிபோபுளேவின் மற்றும் நியாசின் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. ஓமம் விதைகளில் அதிக அளவு வைட்டமின்கள் A, B1, B6, E, கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு, துத்தநாகம், தாமிரம், மாங்கனீசு, செலினியம் மற்றும் தயாமின் ஆகியவை உள்ளன.
ajwain seeds in tamil
பயன்பாடுகள்
ஓமம், சித்த மற்றும் ஆயுர்வேத மருதத்துவத்தில் அதிகம் பயன்படுத்தபப்டுகிறது. இது, இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிற ஒரு மூலிகைச் செடிவகையாகும். மருத்துவ குணம் கொண்ட இத்தாவரத்தை, ரொட்டி (Bread), கேக் (Cake) தயாரிக்கவும், மதுபான வகைகளுக்கு மணமூட்டவும் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.
தாய்மார்களுக்கு
பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு ஓமத் திரவம் நல்ல ஜீரண சக்தியைத் தரும். ஜீரணத்திற்கு மட்டுமல்லாமல் சளி, இருமல் போன்ற தொந்தரவிற்கும் ஓமத் திரவம் அருமருந்தாக்க விளங்குகிறது.
மாதவிடாய் சுழற்சி சீராக
மாதவிடாய் சுழற்சி சீராக இருக்கவும், சிறுநீர் பாதையை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் இது மிக உதவியாக இருக்கிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிக்கும் ஓமத் திரவத்தை அருந்தினால் வலியில் இருந்து விடுபடலாம். வயிற்றில் புண் இருந்தால் ஆறுவதற்கும் ஓமம் மிகவும் உதவியாக இருக்கும்.
வெறும் கடாயில் கால் தேக்கரண்டி ஓமம் சேர்த்து மிதமான சூட்டில் வைத்து வறுக்கவும். நன்கு பொரியும்வரை வறுக்கவும். பின்பு அதோடு அரை கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். அரை கப் தண்ணீர் கால் கப் தண்ணீர் ஆகும் வரை கொதிக்க விடுங்கள்.
பெரியவர்கள் ஓமத் திரவத்தை அப்படியே அருந்தலாம். சின்ன குழந்தைகளுக்கு சிறிது பனங்கற்கண்டு சேர்த்து அருந்த வைக்கலாம்.
ajwain seeds in tamil
ஓமம் செரிமானத்திற்கு உதவும்
ஓமத்தில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது, இது மலச்சிக்கலை எளிதாக்க உதவுகிறது மற்றும் காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்ற பிற உணவுகளுடன் இதை உட்கொள்ளலாம்.
ஓமம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்
ஓமம் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த மூலிகையை தொடர்ந்து உட்கொள்வதால், உடலில் உள்ள ஆஞ்சியோடென்சின் அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம்.
முடி உதிர்வை தடுக்கும்
முடி உதிர்தல் பிரச்னைகளைத் தடுக்க அல்லது சிகிச்சையளிக்க ஓமத்தின் புதிய சாறு தினமும் உச்சந்தலையில் பயன்படுத்தப்படுகிறது.
ajwain seeds in tamil
இருமல் மற்றும் சளிக்கு
ஃபரிங்கிடிஸ் அல்லது லாரன்கிடிஸ் போன்ற மார்பு நோய்த்தொற்றுடன் தொடர்புடைய பிரச்னையை போக்க 1 தேக்கரண்டி உலர்ந்த ஓம விதைகளை ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிடலாம்.
மேம்படும் மூளை செயல்பாடு
நினைவாற்றல் மற்றும் செறிவு சக்தியை மேம்படுத்துவதில் ஓமம் பயனுள்ளதாக இருக்கிறது. வாரம் இருமுறை ஒரு தேக்கரண்டி அளவு உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.
மன அழுத்தம் குறைய
மனச் சோர்வு மற்றும் மன அழுத்தத்தை குறைக்க ஓமம் பயனுள்ளதாக இருக்கும். இரவில் படுக்கும் முன் ஒரு ஸ்பூன் ஓமத்தை பொடி செய்து சாப்பிடலாம்.
நீரிழிவு கட்டுப்படும்
அரிசியுடன் ஓமம் சாப்பிடுவது நீரிழிவு நோயைத் தடுப்பதற்கு நன்மை பயக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. 100 மில்லி மோரில் 2 டீஸ்பூன் தூள் ஓமம் சேர்த்து நாள் முழுவதும் குடிக்கவும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
ஓமத்தை தொடர்ந்து உட்கொள்வது ஆன்டிபாடிகளின் உற்பத்தியை அதிகரிக்கிறது.அதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. எனவே நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த ஓமம் அதிகமாக சாப்பிடலாம்.
ajwain seeds in tamil
எலும்பு வளர்ச்சிக்கு
விரைவான எலும்பு வளர்ச்சியைத் தூண்டுவதற்கு 1-2 மாத்திரைகள் வைட்டமின் D3 உடன் 1 தேக்கரண்டி ஓமம் விதைகளை தினமும் சேர்த்துக்கொள்ளலாம்.