aavaram poo benefits-அடேங்கப்பா..ஆவாரம்..! குழந்தை பாக்யம் கிடைக்கும்..!
aavaram poo benefits-தமிழக கிராமங்கள்தோறும் ஆவாரம் செடி வயல்வெளிகளில், காடுகளிலும் முளைத்துக் கிடக்கின்றன. ஆனால் அதன் மருத்துவ மகிமையை நாம் இன்னும் அறியாமல் இருக்கிறோம்.
HIGHLIGHTS

aavaram poo benefits-ஆவாரம் செடி மருத்துவ பயன்கள் (கோப்பு படம்)
aavaram poo benefits-ஆவாரம் செடியின் முழு பாகங்களும் மருத்துவ குணம் உடையது. அது துவர்ப்புக் குணமும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. சிறுநீரக, சிறுநீர்த்தாரை சம்பந்தமான நோய்களையும், ஆண்குறி எரிச்சலையும் நீக்கும் தன்மை கொண்டது.
உடல் துர்நாற்றம்
ஆவாரம் இலை, பூ, பட்டை உடலைப் பலமாக்கும். துவர்ப்புத் தன்மையைக் கூட்டும். ஆவாரம் பூ உடல் வறட்சி, உடலில் ஏற்படும் கற்றாழை நாற்றம் ஆகியவற்றைப் போக்கும். சருமம் பொன்னிறமாக மாறும். ஆவாரம் வேர், இளைத்த உடலைத் தேற்றும். அதன் விதை காமம் பெருக்கும், உடலில் குளிர்ச்சி உண்டாக்கும்.
சர்க்கரை புண்
ஆவாரம் இலையை நன்றாக அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் இட்டு அதனுடன் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து குறைந்த அனலில் ஆவாரம் விழுதை வதக்க வேண்டும். அதை சுத்தமான காட்டனில் வைத்து கட்டவேண்டும். இதுபோல் ஒருநாள் விட்டு ஒருநாள் சர்க்கரை நோயால் ஏற்படும் குழிப்புண்கள் மீது கட்டிவர அந்த புண்கள் மறைந்துவிடும்.
aavaram poo benefits
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல்
வெள்ளைப்படுதல், சிறுநீர் எரிச்சல் தீர ஆவாரையின் பூ இதழ்களைச் சேகரித்து, நிழலில் உலர்த்தி, தூள் செய்து ½ கிராம் அளவு எடுத்து 2 கிராம் அளவிலான வெண்ணெயில் குழைத்துத் தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் மற்றும் சிறுநீர் எரிச்சல் தீரும்.
உடல்சூடு, தோல் வறட்சி நீங்கி பலம் பெற ஆவாரை பூச்சூரணத்தை பாலில் கலந்து குடித்துவர வேண்டும். அல்லது பூவைக் குடிநீராக்கியும் சாப்பிட்டு வரலாம். பூ இதழ்களைச் சேகரித்து அதை கூட்டு செய்து, தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.
மாதவிடாய் இரத்தப் போக்கு தீர
மாதவிடாயின்போது ஏற்படும் அதிக இரத்தப் போக்குக் கட்டுப்பட 20 கிராம் ஆவாரைப் பட்டையைப் பொடி செய்து, ஒரு லிட்டர் அளவிலான நீரில் இட்டு, 200 மில்லியாக சுண்டும் வரை காய்ச்சி, 50 மி.லி. அளவில் காலை, மாலை வேளைகளில் குடித்துவர இரத்தப்போக்கு கட்டுப்படும்.
aavaram poo benefits
தோல் அரிப்பு
தோல் அரிப்பு மற்றும் நமைச்சல் குணமாக பசுமையான அல்லது உலர்ந்த பூக்களுடன், சமஅளவு பச்சைப்யிறு சேர்த்து அரைத்து, வெந்நீர் கலந்து பசையாக்கி, உடம்பில் தேய்த்து ஊறவைத்து, சிறிது நேரம் கழித்துக் குளிக்க வேண்டும்.
குழந்தை பாக்யம் பெற
திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத பெண்களுக்கு ஆவாரை பயன்படுகிறது. அதாவது, கருப்பட்டியுடன் ஆவாரைப் பூவை சேர்த்து உண்டு வந்தால், பெண்களுக்கு மலட்டுத் தன்மை நீங்கும். விரைவில் கர்ப்பம் உண்டாகும் வாய்ப்பு ஏற்படும்.
ஆவாரம்பட்டை, அத்திப்பட்டை, நாவல்பட்டை இவை மூன்றையும் சம அளவு பொடி செய்து தேனில் 5-10 நாட்கள் சாப்பிட்டு வர வெள்ளை நோய் மற்றும் நீரிழிவு தீரும்.