Aali vithai benefits in tamil-பெண்களுக்கு பெரு நன்மை தரும் ஆளிவிதை..!

Aali vithai benefits in tamil-பெண்களுக்கு பெரு நன்மை தரும் ஆளிவிதை..!
X

Aali vithai benefits in tamil-ஆளி விதையின் நன்மைகள் (கோப்பு படம்)

ஆளி விதையில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. அதை பயன்படுத்தி எவ்வாறான நன்மைகளைப் பெறலாம் என்று பார்ப்போம் வாங்க.

Aali vithai benefits in tamil

ஆளி விதை பல சக்திகள் நிறைந்த மருத்துவ குணம் கொண்ட விதையாகும். ஆளி விதை பழங்காலத்தில் இருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆளி விதை முதன் முதலில் எகிப்தில் நாட்டில்தான் பயன்படுத்தி வந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆளி விதை தற்போது இந்தியாவிலும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.


100 கிராம் ஆளிவிதையில்

கலோரிகள் – 530

நல்ல கொழுப்பு – 37 கிராம்,

நார்ச்சத்து – 28 கிராம்,

புரதச்சத்து – 20 கிராம்.

ஆளிவிதையில் லிக்னன்ஸ், நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலம், போன்ற சத்துக்கள் உள்ளன.

ஆளி விதையில் புரதம், தாமிரம், மெக்னீசியம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், மாங்கனீசு மற்றும் துத்தநாகம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மேலும் அவை எடை இழப்பு மற்றும் முடி வளர்ச்சிக்கு உதவும் சிறந்த மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன.

Aali vithai benefits in tamil

குறிப்பாக பெண்களுக்கு இது பல வழிகளில் நன்மை அளிக்கும். பெண்கள் தங்களை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள ஆரோக்யமான விஷயங்களைத் தேடுகிறார்கள். அதில் இந்த ஆளி விதை முக்கிய இடத்தைப்பிடிக்கிறது.

தினமும் 1 டீஸ்பூன் ஆளி விதை உட்கொள்வதால் பல ஆரோக்ய நன்மைகள் கிடைக்கின்றன என்பதை அறிவது அவசியம். ஆளி விதையில் தாதுக்கள், வைட்டமின்கள் ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் இவற்றை சூப்பர் ஃபுட் என்று அழைக்கின்றனர்.

ஒரு ஸ்பூன் ஆளி விதையில் புரதம், நார்ச்சத்து, ஒமேகா- 3 கொழுப்பு அமிலங்கள் ஆகியவை நிறைந்துள்ளன. ஆளி விதை மஞ்சள் மற்றும் சிவப்பு இரண்டும் சேர்ந்த நிலையில் காணப்படும். இது ஈஸ்ட்ரோஜனைப் போன்ற பைட்டோ ஈஸ்ட்ரோஜன்களைக் கொண்டுள்ளது. இதில் கரையக்கூடிய நார்ச்சத்தும் உள்ளது. ஆளி விதையின் நன்மைகளைக் காணலாம்.

Aali vithai benefits in tamil


மலச்சிக்கல் நீங்க

ஆளி விதையில் அதிக நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கலை எளிய முறையில் தடுக்கிறது. செரிமான அமைப்பை ஆரோக்யமாக வைத்திருக்கிறது. ஆளிவிதையில் இரண்டு முக்கிய வகையான நார்ச்சத்து உள்ளன.

அவை கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் கரையாத நார்ச்சத்து. கரையக்கூடிய நார்ச்சத்து செரிமான விகிதத்தை குறைக்கிறது மற்றும் பல்வேறு குடல் உள்ளடக்கங்களின் நிலைத்தன்மையை அதிகரிக்கிறது. மேலும், இதில் உள்ள கரையாத நார்ச்சத்து, மலத்துடன் அதிக தண்ணீரை இணைக்க உதவுகிறது. இதன் விளைவாக மென்மையான மலம் ஏற்பட்டு, இது ஒரு மலமிளக்கியாக செயல்படுகிறது. மேலும் மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது. வயிற்றுப்போக்கு அல்லது எரிச்சல் கொண்ட குடல் நோய் உள்ளவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒட்டுமொத்தமாக, ஆளிவிதையில் உள்ள நார்ச்சத்து வழக்கமான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது மற்றும் சிறந்த செரிமானத்தை ஊக்குவிக்கிறது.

Aali vithai benefits in tamil


மாதவிடாயை சீர்படுத்துகிறது

அண்டவிடுப்பு மாதவிடாய்க்கும் இடைப்பட்ட காலத்தை இயல்பாக வைத்திருப்பது பெண்களுக்கு முக்கியமான ஒன்றாகும். அதை சரிசெய்ய ஆளிவிதைகள் பெரிதும் உதவி செய்கின்றன. இது கருத்தரிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது. மேலும் ஹார்மோன் சமநிலையை பராமரிக்க உதவுகிறது.

Aali vithai benefits in tamil


முடி மற்றும் சரும நன்மை

ஆளி விதை முடி மற்றும் சருமத்துக்கு மிகவும் நன்மை பயக்கிறது. ஆளி விதையில் வைட்டமின் இ நிறைந்துள்ளது. எனவே வைட்டமின் இ மாத்திரைகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, ஆளி விதை எண்ணெயை நேரடியாக உச்சந்தலையிலும் முடியிலும் தேய்க்கலாம்.

இது முடியை பலப்படுத்துகிறது மற்றும் அவற்றின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. ஆளி விதை ஜெல்லானது தோல் மற்றும் முடிக்கு நன்மையை தரக்கூடியவை ஆகும். ஆளி விதை ஜெல்லை தலைமுடியில் தடவி குளிப்பதற்கு 1 மணி நேரத்திற்கு முன் கழுவி வந்தால் இது முடி மற்றும் முகத்தின் பொலிவை அதிகரிக்க உதவுகிறது. முகத்தில் தேய்த்து கழுவினால், சருமம் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

Aali vithai benefits in tamil


இதய ஆரோக்யம் பேணும்

நமது உணவு பழக்க வழக்கங்களால் இதய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆளி விதைகளை உட்கொள்வதால் இதயம் ஆரோக்யமாக இருக்கும். இதயத்தில் ஏற்படும் பிரச்னைகள் குறையும். ஆளி விதையை தண்ணீரில் கலந்து காலை வேளையில் சாப்பிட்டு வர பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.

Aali vithai benefits in tamil


மூட்டு வலி குறையும்

ஆளி விதை உங்கள் மூட்டுகளில் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன.ஆளி விதை எண்ணெயில் ஆல்ஃபா-லினோலெனிக் அமிலம் (ALA) உள்ளதால் செல் அமைப்பு மற்றும் கூட்டு செயல்பாட்டை பராமரிக்கிறது. ALA உடலில் இரண்டு முக்கிய சேர்மங்கலான டோகோசாஹெக்ஸெனோயிக் அமிலம் (DHA) மற்றும் ஈகோசாபென்டெனோயிக் அமிலம் (EPA) ஆகிய இரண்டு சேர்மங்களாக உருவாகின்றன. இரத்தத்தில் உள்ள புரோஸ்டாக்லாண்டின்கள் எனப்படும் அழற்சி எதிர்ப்பு பொருட்கள் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

Aali vithai benefits in tamil


எடை குறைய

நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், ஆளி விதையினை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இது எடை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது பசியைக் கட்டுப்படுத்துகிறது. இதில் ஒமேகா கொழுப்பு மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது.

ஊட்டச்சத்துகளை சரியாக உறிஞ்சுவதற்கு, ஆளிவிதை தூளை உட்கொள்வது நல்லது. உணவுக்கு இடையில் சிற்றுண்டி உண்ண வேண்டும் அல்லது உங்கள் உணவு உட்கொள்ளலை குறைக்க விரும்பினால் ஆளிவிதைகள் ஒரு சிறந்த தேர்வாகும்.

Aali vithai benefits in tamil


புரதசத்து நிறைந்தது

ஆளி விதையில் வளமான அளவில் டயட்டரி புரோட்டீன்கள் நிறைந்துள்ளது. மேலும் ஆளி விதையில் அத்தியாவசியமான அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளன. எனவே ஒருவர் தினமும் ஆளி விதையை சாப்பிட்டு வந்தால், உடலுக்குத் தேவையான புரதம் கிடைக்கும்.

Aali vithai benefits in tamil

அழற்சியை எதிர்ப்பு பண்பு

ஆளி விதையில் வளமான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளதால், உடலினுள் உள்ள அழற்சியை எதிர்த்துப் போராடும். ஒருவரது உடலில் அழற்சியானது அதிகம் இருந்தால்,ஆஸ்துமா, இதய நோய்கள் மற்றும் சில வகையான புற்றுநோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே ஆளி விதையை தினமும் சாப்பிட்டு உடல் ஆரோக்யத்தை மேம்படுத்தலாம்.

Aali vithai benefits in tamil

நோயெதிர்ப்பு மண்டலம் மேம்படும்

ஆளி விதையில் உள்ள ஆல்பா-லினோலினிக் அமிலம் மற்றும் லிக்னன்கள், உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, உடலைத் தாக்கும் அழற்சி நோய்களிலிருந்து பாதுகாக்கும்.

Aali vithai benefits in tamil


கண் ஆரோக்யம்

ஆளி விதையை தினமும் சாப்பிட்டு வந்தால், கண்களில் ஏற்படும் வறட்சியைக் குறைக்கலாம். மேலும் ஆளி விதையில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளதால், கண் நரம்புகளில் பாதிப்பை ஏற்படுத்தும் நோய்களுள் ஒன்றான மாகுலர் திசு சிதைவு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும்.

இவ்வாறு பல்வேறு நன்மைகளை அளிக்கும் ஆளி விதையை பயன்படுத்தி வாழ்வில் பயன் பெறுவோம்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!