கர்ப்பம் ஆகி 38வது நாளில் என்னென்ன அறிகுறிகள் இருக்கும்..? படிச்சு தெரிஞ்சிக்கங்க..!

38 Weeks Pregnant Symptoms in Tamil-திருமணம் முடிந்தவுடன் சிலர் உடனே குழந்தை வேண்டும் என்பார்கள். சில தம்பதிகள் கொஞ்ச நாள் ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு அப்புறம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்பார்கள். ஆனாலும் குழந்தை பிறப்பதை மிக ஆவலோடு ஒவ்வொரு பெண்ணும் தனது வாழ்நாளில் எதிர்பார்ப்பார்கள். அதுவே தாய்மைக்கான மகிழ்ச்சித் தருணமாகும்.
கர்ப்பம் தரித்துவிட்டால் உடல் நமக்கு அவ்வப்போது சில அறிவிப்புகளை செய்யும். உடல் குழந்தையைச் சுமப்பதற்குத் தயாராகிவிடும். எல்லா பெண்களுக்கும் ஒரே மாதிரியான கர்ப்ப கால அறிகுறிகள் தென்படாது என்றாலும், சில பொதுவான அறிகுறிகள் எல்லோருக்கும் உள்ளன. சில முக்கியமான அறிகுறிகள் என்ன என்பதைப் பார்க்கலாம் வாங்க.

மாதவிடாய் தள்ளிப்போவது:
மாதவிடாய் தள்ளிப்போவது என்பது பெண் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்யும் மிக முக்கியமான அறிகுறி. ஒரு சாதாரண மாதவிடாய் சுழற்சி என்பது 21 முதல் 35 நாட்கள் வரை இருக்கும். குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கும் பெண்களின் மாதவிடாய், 7 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் தள்ளிப்போனால் கர்ப்பமாக உறுதியாகவுள்ளதா என்பதை மருத்துவரிடம் பரிசோதித்துக்கொள்வது நல்லது. மாதவிடாய் சுழற்சிக்கு பிறகு அடுத்த மாதவிடாய் சுழற்சியை எதிர்நோக்கும் பெண்கள் அடுத்த மாதவிடாய் காலத்தை எதிர்நோக்குவதற்குள் கருவுற்ற அறிகுறிகள் வெளிப்பட்டுவிடும்.
காலையில் ஏற்படும் சுகவீனம் (மார்னிங் சிக்னஸ்):
கர்ப்பம் உடலில் சில ஹார்மோன் மாற்றங்களைக் கொண்டுவருகிறது. கர்ப்பத்தின் ஆரம்ப நாட்களில் பாதிக்கும் மேற்பட்ட பெண்கள் குமட்டல் மற்றும் வாந்தி பிரச்னையை எதிர்கொள்கின்றனர். இது பசியின்மையுடன் சேர்ந்து கொள்ளலாம். காலை நேரங்களில் ஏற்படும் சுகவீனம் என்பது பெரும்பாலான பெண்களுக்கு படுக்கையை விட்டு எழும் காலை நேரத்திலேயே தொடங்கிவிடும். சிலருக்கு இது மாலை அல்லது இரவு வேளைகளிலும் ஏற்படலாம். அதேபோல் பல பெண்களுக்கு நாள் முழுவதும் கூட குமட்டல், வாந்தி, சோர்வு போன்றவைகள் ஏற்படலாம். சிலருக்கு வாசனையிலும் ஒவ்வாமையை உண்டாக்கி குமட்டலை உண்டாக்கும்.

மார்பகத்தில் ஏற்படும் மாற்றங்கள்:
ஒரு பெண் கருத்தரிக்கும்போது, மார்பகங்களில் சில மாற்றங்களை உணர முடியும். குழந்தைக்கு தேவையான தாய்ப் பால் சுரப்பதற்காக ஹார்மோன்கள் தயாராகும்போது , சில அசெளகரியமான உணர்வுகள் ஏற்படும். திடீரென மார்பகங்கள் பெரிதாகி விட்டது போன்ற உணர்வு, மென்மையான அல்லது கனமாக இருப்பதைப் போன்று உணரலாம். மார்பக காம்புகள் தடித்து, கருமையாக மாற ஆரம்பிக்கும். இந்த அறிகுறிகள் பெண் கர்ப்பம் தரித்துவிட்டதை உறுதி செய்யும் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாகும்.
அடிக்கடி சிறுநீர் போதல் :
கர்ப்ப காலத்தின் தொடக்க காலங்களில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதும் ஒன்று. கர்ப்ப காலத்தில் உடலில் திரவங்கள் அதிகரித்து சிறுநீரை வெளியேற்றுவதில் சிறுநீரகம் விரைவாக செயல்பட வழிவகுக்கிறது. குறிப்பாக இரவு நேரத்தில் நிம்மதியாக தூங்க முடியாமல், அடிக்கடி சிறுநீர் போக வேண்டிய நிலை ஏற்படலாம்.

பசி எடுத்தல் :
கர்ப்ப காலத்தை எட்டியுள்ள பெண்கள் அதிக பசியை உணர்வார்கள். கருத்தரிப்பால் உடலில் ஏற்பட்டுள்ள ஹார்மோன் மாற்றம் ஊட்டச்சத்து தேவையை உடல் அதிகம் எதிர்பார்க்கும். அதனால் கர்ப்பம் தரித்த பெண்ணுக்கு பசியும், தாகமும் அதிகரிக்கும். சிலருக்கு பசியின்மை, அஜீரண கோளாறு, மலச்சிக்கல், வயிற்றில் காற்று நிரம்பியது போன்ற அசெளகரியமான உணர்வும் தோன்றலாம்.
38வது நாள் :
கருத்தரித்து 38வது நாளில் முலைக்காம்புகள் கருமையாகத் தோன்றும். அரிப்பு,கூச்சம் அல்லது காம்பின் முனையில் முட்கள் போன்று தோன்றி இருக்கும். இது மாதவிடாய்க்கு முந்தைய அறிகுறிகளிலிருந்து வேறுபட்டவை. மாதவிடாய் சுழற்சி வராத நிலையிலும் தோன்றும். ஹார்மோன் மாற்றங்கள் உடலை சோர்வாக வைத்திருக்கும். சோர்வு மற்றும் தூக்கம் இருப்பது கர்ப்பத்தின் ஆரம்ப அறிகுறிகளாகும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
Tags
- 38 days pregnancy symptoms in tamil
- 33 days pregnancy symptoms in tamil
- 45 days pregnancy symptoms in tamil
- 50 days pregnancy symptoms in tamil
- 39 weeks pregnant symptoms in tamil
- 37 weeks pregnant symptoms in tamil
- 21 weeks pregnant symptoms in tamil
- 36 weeks pregnant symptoms in tamil
- after ovulation pregnancy symptoms in tamil
- pregnancy pain symptoms in tamil
- 35 weeks pregnant symptoms in tamil
- 38 weeks pregnant in tamil
- how many days to confirm pregnancy in tamil
- bleeding in 40 days of pregnancy in tamil
- 37 weeks pregnant in tamil
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu