தென்காசியில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்

தென்காசியில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்
X

தென்காசி VTSR மஹால் அருகே உள்ள ஐந்து வர்ணம் பெரிய பள்ளிவாசல் அருகே உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

தென்காசி ஐந்து வர்ணம் பெரிய பள்ளிவாசல் அருகே திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

விரைவில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சியினர் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் போட்டியிடும் வார்டு உறுப்பினர்களிடம் விருப்ப மனு பெறுதல், நேர்காணல் போன்ற நிகழ்வுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதன்படி இன்று தி.மு.க சார்பில், தென்காசி VTSR மஹால் அருகே உள்ள ஐந்து வர்ணம் பெரிய பள்ளிவாசல் அருகே உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வின் போது ஏராளமானோர் தி.மு.க-வில் தங்களை உறுப்பினர்களாக இணைத்து கொண்டனர். புதிய உறுப்பினர்களுக்கு தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் சிவபத்ம நாதன் உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார். இம்முகாமில் தென்காசி நகர செயலாளர் சாதிர், மாவட்ட நுகர்வோர் பண்டகசாலை தலைவர் ஷமீம் இப்ராகிம், மாவட்ட வழக்கறிஞர் அணி ரகுமான் சாதத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 640 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு