திருச்சி பொன்மலை முன்னாள் ராணுவத்தினர் காலனியில் இளைஞர் கழுத்தறுத்து கொலை

திருச்சி பொன்மலை முன்னாள் ராணுவத்தினர் காலனியில் இளைஞர் கழுத்தறுத்து கொலை
X
திருச்சி பொன்மலை முன்னாள் ராணுவத்தினர் காலனியில் இளைஞர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார்.

திருச்சி பொன்மலையில் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்சி அருகே உள்ள பொன்மலை பகுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 35 ).இவர் கோவையில் ஏ.சி. மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார். ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக இன்று காலை திருச்சி வந்த முத்துப்பாண்டி பொன்மலை சந்தையில் தனது நண்பர் ஒருவரின் மீன்கடையில் அவருடன் சேர்ந்து வியாபாரம் பார்த்து உள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் முத்துப்பாண்டியை அடையாளம் தெரியாத நபர்கள் மாஜி ராணுவ காலனி அடுத்துள்ள நாகம்மாள் கோவில் அருகே கழுத்து அறுத்து கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.இதுபற்றிய தகவல் அறிந்ததும் பொன்மலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர். மேலும் விரல் ரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். போலீஸ் துப்பறியும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அப்பகுதியில் பதிவாகியுள்ள சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கொலையாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!