திண்டுக்கல் டீ மாஸ்டரின் மோட்டார் சைக்கிளை திருடிய இளைஞர் கைது

திண்டுக்கல் டீ மாஸ்டரின் மோட்டார் சைக்கிளை திருடிய இளைஞர் கைது
X

மோட்டார் சைக்கிள் திருடியதாக கைது செய்யப்பட்ட தங்கபாண்டி.

திண்டுக்கல் டீ மாஸ்டரின் மோட்டார் சைக்கிளை திருடிய இளைஞரை போலீார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாசிலாமணிபுரத்தைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம் (வயது 50).இவர் திண்டுக்கல் சாலைரோட்டில் உள்ள ஒரு டீக்கடையில் ஊழியராக உள்ளார்.சம்பவத்தன்று காலை தனது மோட்டார் சைக்கிளை டீக்கடை அருகே நிறுத்திவிட்டு கடையில் வேலை செய்து கொண்டிருந்தார். பின்னர் மாலையில் வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை மர்ம நபர் யாரோ திருடி சென்றது தெரிய வந்தது.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து திண்டுக்கல் நகர் வடக்கு போலீசில் புகார் செய்தார்.அதன் பேரில் நகர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபரை பிடிக்க திண்டுக்கல் எஸ்.பி. பாஸ்கரன் தனிப்படை போலீசாருக்கு உத்தர விட்டார்.

அதனைத் தொடர்ந்து டவுன் டி.எஸ்.பி.கோகுல கிருஷ்ணன் மேற்பார்வையில்,நகர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையில்,சப்-இன்ஸ்பெக்டர் சித்திக்,நகர் உட்கோட்ட குற்றப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் வீரபாண்டியன், ஜார்ஜ் எட்வர்டு , தலைமை காவலர்கள் ராதாகிருஷ்ணன்,முகம்மது அலி,விசுவாசம், சக்திவேல் மற்றும் சி.சி.டிவி தலைமை காவலர்கள் ஜான் சுரேஷ்குமார்,செல்வி ஆகியோர் இணைந்து பல்வேறு கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.மேலும் அந்தப் பகுதியில் பொருத்த ப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது பாலசுப்பிரமணியனின் மோட்டார் சைக்கிளை வாலிபர் ஒருவர் எடுத்துச் செல்வது போலீசாருக்கு தெரியவந்தது.அந்த காட்சியில் பதிவான வாலிபரின் புகைப்படம் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.அதில் அவர் பழனியை அடுத்த பாலசமுத்திரத்தை சேர்ந்த தங்கபாண்டி (27)என்பது தெரியவந்தது.

இதையடுத்து தங்கபாண்டியை போலீசார் கைது செய்தனர்.மேலும் அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்ப ட்டது.கைது செய்யப்பட்ட தங்கப்பாண்டிக்கு திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!