கொலை முயற்சி வழக்கில் கைதான இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கொலை முயற்சி வழக்கில் கைதான இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
X
தூத்துக்குடியில் கொலை முயற்சி வழக்கில் கைதான இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தூத்துக்குடி மாவட்டம் வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகள் 2 பேர் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி இதற்கான உத்தரவினை பிறப்பித்தார்.

கடந்த 02.12.2023 அன்று தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திரேஸ்புரம் பகுதியில் வந்து கொண்டிருந்த தூத்துக்குடி பூபால்ராயர்புரம் பகுதியைச் சேர்ந்த அந்தோணிசாமி மகன் சார்லஸ் (40) என்பவரை மதுபோதையில் வழிமறித்து அவரிடம் தகராறு செய்து இரும்பு கம்பியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் தூத்துக்குடி திரேஸ்புரம் மாதவன்நாயர் காலனியைச் சேர்ந்தவர்களான பெருமாள் (எ) குட்டையன் மகன் சுரேஷ்குமார் (எ) ஜெமினி (27) மற்றும் செந்தூர்பாண்டி மகன் தங்கராஜா (எ) ராஜா (20) ஆகிய இருவரை வடபாகம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

மேற்படி இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட சுரேஷ்குமார் (எ) ஜெமினி, தங்கராஜா (எ) ராஜா ஆகிய இருவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.

மேற்படி காவல் உதவி கண்காணிப்பாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தூத்துக்குடி திரேஸ்புரம் மாதவன்நாயர் காலனியைச் சேர்ந்தவர்களான பெருமாள் (எ) குட்டையன் மகன் சுரேஷ்குமார் (எ) ஜெமினி மற்றும் செந்தூர்பாண்டி மகன் தங்கராஜா (எ) ராஜா ஆகிய இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் மேற்படி இருவரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்தியசிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Tags

Next Story
future of ai act