திருச்சி பிரணவ் ஜுவல்லர்ஸ் உரிமையாளர் மதனுக்கு 7 நாள் போலீஸ் கஸ்டடி

திருச்சி பிரணவ் ஜுவல்லர்ஸ் உரிமையாளர்  மதனுக்கு 7 நாள் போலீஸ் கஸ்டடி
X
திருச்சி பிரணவ் ஜுவல்லர்ஸ் உரிமையாளர் மதனுக்கு 7 நாள் போலீஸ் கஸ்டடி வழங்கி நீதிமன்றம் தீர்பளித்து உள்ளது.

திருச்சி பிரணவ் ஜூவல்லரி மோசடி வழக்கில் அதன் உரிமையாளரை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் பிரணவ் ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகை கடை நடத்தி வந்தவர் மதன். தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி மற்றும் குறைந்த விலையில் நகைகள் தருவதாக கவர்ச்சிகரமான விளம்பரங்கள் செய்தது பிரணவ் ஜூவல்லர்ஸ். இதனை நம்பி ஏராளமான பொதுமக்கள் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். இதனை தொடர்ந்து பிரணவ் ஜூவல்லர்ஸ் மதுரை, சென்னை ,கும்பகோணம் உள்ளிட்ட பல இடங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டது .

இந்த நிலையில் முதலில் சில மாதங்கள் மட்டுமே முதலீடு செய்தவர்களுக்கு வட்டி பணம் அளித்து வந்த பிரணவ் ஜூவல்லர்ஸ் பின்னர் வட்டி பணம் வழங்கவில்லை. முதலீடு செய்தவர்கள் கடையில் போய் கேட்டபோது அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை. பின்னர் திடீரென ஒரு நாள் கடைகள் அனைத்தும் இழுத்து மூடப்பட்டது .இதன் காரணமாக அந்த கடையில் முதலீடு செய்தவர்கள் போலீசில் புகார் செய்தனர். கடையை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தினார்கள்.

இதனை தொடர்ந்து திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பிரணவ் ஜூவல்லர்ஸ் உரிமையாளர் மதன் மற்றும் அவரது மனைவி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அவர்கள் தலைமறைவாக இருந்தனர். அந்த நேரத்தில் போலீசார் கடையின் மேலாளர் நாராயணன் என்பவரை மட்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த பிரணவ் ஜூவல்லர்ஸ் உரிமையாளர் மதன் மதுரை கோர்ட்டில் சரணடைந்தார்.அதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மதனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என மதுரை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஏழு நாட்கள் போலீஸ் காவலில் மதனை எடுத்து விசாரிப்பதற்கு அனுமதி வழங்கி உள்ளது. இதனை தொடர்ந்து திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மதனிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!