திருச்சியில் ஏடிஎம் மில் நிரப்பவேண்டிய பணத்தை கையாடல் செய்த மூவர் கைது
தனியார் நிறுவனம் மூலம் ஏடிஎம்களில் பணம் நிரப்பும் பணியாளர்கள் ரூ. 70 லட்சத்து 77 ஆயிரத்து 600 கையாடல் செய்ததற்காக கைது செய்யப்பட்டனர்.
ஹிட்டாச்சி கேஷ் மேனேஜ்மென்ட் என்ற ஏடிஎம்களில் பணம் நிரப்பும் நிறுவனத்தின் கிளை மேலாளர் சார்லஸ். இவர் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினியிடம் கொடுத்த புகாரில் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் மூன்று பணியாளர்கள் பணம் 70 லட்சத்து 77 ஆயிரத்து 600 ஏடிஎம்மில் நிரப்பாமல் கையாடல் செய்துள்ளதாக புகார் அளித்தார். இது பற்றி விசாரணை நடத்த மாநகர காவல் ஆணையர் காமினி உத்தரவிட்டார்
அந்த உத்தரவின் அடிப்படையில் திருச்சி மாநகர குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது இந்நிலையில் விசாரணையில் ஹிட்டாச்சி கேஷ் மேனேஜ்மென்ட் சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரியும் சக்திவேல் ,பூவேலன், கோவிந்தராஜ் ஆகியோர் ஹிட்டாச்சி கேஷ்மேனேஜ்மென்ட் சர்வீஸில் நிறுவனத்தின் மூலம் வங்கி ஏடிஎம்களில் பணம் நிரப்பும் ஆபரேட்டராக பணிபுரிந்து கொண்டு ஏடிஎம்மில் நிரப்ப வேண்டிய பணத்தை முழுவதும் நிரப்பாமல் அதில் எட்டு ஏடிஎம்மில் நிரப்பப்பட வேண்டிய தொகை 70 லட்சத்து 77 ஆயிரத்து ௬௦௦ ஐ கையாடல் செய்து ஏடிஎம்மில் முழு தொகையும் நிரப்பி விட்டதாக அரிக்கையை சமர்ப்பித்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.
இது தொடர்பாக விசாரணையில் மேற்கண்ட அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த சக்திவேல் ,பூவேலன், கோவிந்தராஜ் ஆகியோர்களை விசாரணை செய்து மேற்கண்ட தொகை அவர்கள் கையாடல் செய்து உறுதி செய்யப்பட்டது. சக்திவேல் என்பவர் 70 லட்சத்து 77 ஆயிரத்து 600 ரூபாய் கையாடல் செய்ததற்கு உடந்தையாக பூவேலன் மற்றும் கோவிந்தராஜ் இருந்துள்ளதாக ஒப்புக்கொண்டனர்.
இதனை தொடர்ந்து அவர்கள் மூவரும் திருச்சி மாநகர காவல் ஆணையர் அறிவுரையின் பேரில் இன்று கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மூவரிடம் இருந்தும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்கள் மூவரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu