திண்டுக்கல் அருகே கொலை வழக்கில் சாட்சிக்கு பாதுகாப்பாக இருந்தவர் கொலை

திண்டுக்கல் அருகே கொலை வழக்கில் சாட்சிக்கு பாதுகாப்பாக இருந்தவர் கொலை
X

கொலை செய்யப்பட்ட அருளானந்த பாபு.

திண்டுக்கல் அருகே கொலை வழக்கில் சாட்சிக்கு பாதுகாப்பாக இருந்தவரை ரவுடி கும்பல் வெட்டி கொலை செய்தது.

திண்டுக்கல் முத்தழகு பட்டியை சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவரது மகன் அருளானந்தபாபு(29). இவர் அதேபகுதியில் முருகேஸ்வரி என்பவருக்கு சொந்தமான கடலைமிட்டாய் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். முருகேஸ்வரியின் மகன்களான தட்சிணா மூர்த்தி, சக்திவேல் ஆகியோருக்கு அருளானந்தபாபு நெருங்கிய நண்பராக இருந்து வந்தார்.

இதில் தட்சிணாமூர்த்தி கடந்த 2016-ம் ஆண்டிலும், சக்திவேல் 2018-ம் ஆண்டிலும் அடுத்தடுத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இந்த கொலை வழக்குகள் திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு வழக்கில் வருகிற 17-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதிகள் அறிவித்திருந்தனர். இந்த வழக்கில் முருகேஸ்வரி முக்கிய சாட்சியாக இருந்து வந்தார்.

அவருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம் என்பதால் தனது நண்பரின் தாயாரான முருகேஸ்வரிக்கு அருளானந்தபாபு துணையாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலையில் குடைபாறை ப்பட்டி கன்னிமாநகர் பகுதியில் அருளானந்தபாபு ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். உயிருக்கு பயந்து அவர் தப்பிஓட முயன்ற போதும் ஓட, ஓட விரட்டி வெட்டியதில் அருளானந்த பாபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து திண்டுக்கல் நகர் தெற்கு போலீசார் வழக்குபதிவு செய்து அருளானந்த பாபு உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து உறவினர்கள் தெரிவிக்கையில், ஏற்கனவே தட்சிணாமூர்த்தி, சக்திவேல் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள்தான் அருளானந்தபாபுவையும் வெட்டி கொன்றிருக்க வேண்டும். எனவே கொலை யாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அடுத்தடுத்து நடந்த இந்த கொலை சம்பவங்களால் திண்டுக்கல் நகர் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!