அரிவாளால் வெட்டி பணம் கொள்ளையடித்தவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
திருச்சியில் ஆட்டோ டிரைவரை அரிவாளால் வெட்டி பணத்தை பறித்து சென்றவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவின் பேரில் திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் வகையில் ஆயுதங்களை காண்பித்து பணத்தை கொள்ளையடிக்கும் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள், சரக உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் சட்டரீதியான நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த 12 -9 -2023 ஆம் தேதி கன்டோன்மென்ட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தலைமை தபால் நிலைய சிக்னல் அருகில் மளிகை கடையில் வியாபாரம் செய்த பணம் ரூ 37 ஆயிரத்து 500ஐ கடை ஊழியர் பையில் வைத்து வங்கிக்கு செலுத்த ஆட்டோவில் சென்றார். ஆட்டோவை வழிமறித்து அரிவாளை காண்பித்தும் தடுக்க முயன்ற ஆட்டோ ஓட்டுநரை வெட்டி காயப்படுத்தி விட்டு பணத்தை கொள்ளைடித்துச் சென்று விட்டதாக பெறப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
விசாரணையில் அறிவாளை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடித்து சென்றவர் காந்திமார்க்கெட் பகுதியை சேர்ந்த ரவுடி படையப்பா (வயது 24) என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து படையப்பா மற்றும் நான்கு நபர்களை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
ரவுடி படையப்பா மீது காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் ஒரு அடிதடி மற்றும் ஒரு வழிப்பறி என இரண்டு வழக்குகளும், கோட்டை காவல் நிலையத்தில் ஒரு அடிதடி வழக்கு உட்பட 3 வழக்குகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. எனவே ரவுடி படையப்பா என்பவர் தொடர்ந்து திருட்டு பணம் மற்றும் தங்க சங்கிலி பறித்து செல்லும் செயல்களில் ஈடுபட்டு வருவதாக விசாரணையில் தெரிய வந்ததால் படையப்பாவின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் முரட்டு கன்டோன்மெண்ட் குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த மாநகர காவல் ஆணையர் காமினி படையப்பாவை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள படையப்பா குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதற்கான உத்தரவின் நகல் மத்திய சிறையில் உள்ள படைப்பாவிடம் சார்வு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த 20 -11 -23ஆம் தேதி மேற்கண்ட வழக்கில் சம்பந்தப்பட்ட ஜாகிர் உசேன் என்பவர் மீது ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் திருச்சி நகரில் ஆயுதங்களை காண்பித்து வழிப்பறி செய்வோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் காவல் ஆணையர் காமினி தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu