வீடு புகுந்து பெண்ணிடம் ஆபாசமாக பேசியவர் குண்டர் சட்டத்தில் கைது

வீடு புகுந்து பெண்ணிடம் ஆபாசமாக பேசியவர் குண்டர் சட்டத்தில் கைது
X
திருச்சியில் வீடு புகுந்து பெண்ணிடம் ஆபாசமாக பேசியவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருச்சியில் பெண்ணிடம் ஆபாசமாக பேசியவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கடந்த 2 -5 -2021 ஆம் தேதி திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சீனிவாச நகரைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வீட்டிற்கு சென்று ஆபாசமாக திட்டி அவரது வீடு மற்றும் இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தியதாக பெறப்பட்ட தகவலின் பேரில் புத்தூர் கீழ வண்ணாரப்பேட்டையை சேர்ந்த வெங்கி என்கிற வெங்கடேசன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டது மேலும் விசாரணையில் ரவுடி வெங்கி என்கிற வெங்கடேசன் என்பவர் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக இரண்டு வழக்குகள் உட்பட ஐந்து வழக்குகள் நிலுவையில் உள்ளது என்று விசாரணையில் தெரியவந்தது.

மேலும் ரௌடி வெங்கி என்கிற வெங்கடேசன் என்பவரின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு அரசு மருத்துவமனை காவல் நிலைய ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த மாநகர காவல் ஆணையர் காமினி மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தினில் கைது செய்ய ஆணையிட்டார்.

அதனைத் தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள வெங்கி என்கிற வெங்கடேசனிடம் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆணை சார்வு செய்யப்பட்டது. மேலும் திருச்சி மாநகரில் இது ஒன்று பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாநகர காவல் ஆணையர் காமினி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!