ஜெர்மனி பெண், நடிகர் ஆர்யா விவகாரம், திடுக்கிடும் திருப்பம், இப்படியுமா நடக்கும்
நடிகர் ஆர்யா திருமண நிச்சயதார்த்தம் பைல் படம்
ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஒருவர், பிரதமர் மோடிக்கு புகார் மனு ஒன்றை அனுப்பினார். அந்த மனுவில், நடிகர் ஆர்யா தன்னிடம் பழகி, திருமணம் செய்வதாக கூறி, ரூ.70 லட்சம் பணத்தை மோசடி செய்துவிட்டதாகவும், அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார்.
இந்த புகார் மனு சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரால் விசாரித்து வந்தது.
இது தொடர்பாக நடிகர் ஆர்யாவை நேரில் அழைத்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் போது நடிகர் ஆர்யா, தன் மீது கொடுக்கப்பட்ட புகார் தவறானது என்றும், ஜெர்மனி பெண்ணை யார் என்றே தனக்கு தெரியாது என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டது. போலீஸ் விசாரணையிலும், நடிகர் ஆர்யா சொன்னது உண்மை என்று தெரியவந்தது.
நடிகர் ஆர்யா போல பேசி, ஜெர்மனி பெண்ணிடம் மோசடி செய்த நபர் யார் என்று போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த முகமது அர்மான் என்பவர்தான், ஜெர்மனி பெண்ணிடம் நடிகர் ஆர்யா என்று தன்னை சமூகவலைதளம் வாயிலாக அறிமுகப்படுத்திக்கொண்டு பழகி, திருமண ஆசைகாட்டி ரூ.70 லட்சம் பணத்தையும் சுருட்டியது தெரியவந்தது.
இதன்பேரில் முகமது அர்மான் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த மோசடிக்கு உடந்தையாக செயல்பட்ட முகமது அர்மானின் உறவினர் முகமது ஹூசைனி என்பவரும் கைதானார்.
ஒரு பெண், நடிகர் என்று பேசியவரிடம் ரூ 70 லட்சத்தை எப்படிக் கொடுப்பார் என்று திரை உலகினர் மத்தியில் சந்தேக கேள்வியும் எழுந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu