தமிழகத்தில் ரவுடிகள் அதிகமுள்ள இடங்கள்..

Rowdy City in Tamilnadu
X

Rowdy City in Tamilnadu

Rowdy City in Tamilnadu-தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்புக்குள்ளாவது, அப்பகுதி ரவுகளின் அட்டகாசம் தலைதூக்கும் போதுதான். சில ஆண்டுகளுக்கு முந்தைய காவல்துறை ஆவணங்களின்படி, தமிழகத்தில் ரவுடிகள் தோராயமான எண்ணிக்கையில் அதிகம் உள்ள இடங்களின் விவரங்கள் வருமாறு:

Rowdy City in Tamilnadu-சென்னை - 3175

தலைநகரில் கொலை சம்பவங்கள் அதிகரித்துவிட்டதை பல உதாரணங்களோடு கூறலாம். கடந்த மே மாதத்தில் மட்டும் 20 நாட்களில் சென்னையில் மட்டும் 18 கொலைகள் அரங்கேறி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

திருநெல்வேலி - 1548

அல்வாவுக்கும், அரிவாளுக்கும் பெயர்போன நெல்லைச்சீமையில், 1548 பேர் உள்ளனர். இவர்களில் நெல்லை நகரில் மட்டும் 334 பேர் உள்ளதாக, காவல்துறை பதிவேடு தெரிவிக்கிறது.

மதுரை - 1372

மல்லிகைக்கு பெயர்போனது நம் மதுரை; அடிதடிகளுக்கும் இங்கு பஞ்சமில்லை. மதுரை நகரில் மட்டும் 888 ரவுடிகள் உள்ளனர். புறநகரில் 484 பேர் உள்ளனர்.

கன்னியாகுமரி - 748

அட கன்னியாகுமரியிலும் ரவுடிகள் இந்த எண்ணிக்கையில் இருக்கிறார்களா என்று வியக்காதீர்கள். ஆமாம், இந்த பூனையும் பால் குடிக்கிறது. இம்மாவட்டத்தில், 748 ரவுடிகளுடன் இம்மாவட்டம் தமிழகத்தில் 4ம் இடத்தில் உள்ளது.

கோவை - 738

மரியாதை தெரிந்த, குளுமையான நகரம் கொங்கு மண்ணான கோவை. இங்கு, கோவை நகரில் 512, புற நகரில் 226 ரவுடிகள் உள்ளனர்.

மற்ற மாவட்டங்கள்

இதேபோல், கடலூர் - 680, விருதுநகர் - 655, சேலம் - 652, தூத்துக்குடி - 605, தஞ்சை மாவட்டத்தில் 584 ரவுடிகள் இருப்பதாக, காவல்துறை பதிவேடு தெரிவிக்கிறது. ரவுடிகளின் எண்ணிக்கை நீலகிரி மாவட்டத்தில் குறைவாக உள்ளது. இங்கு 65 ரவுடிகள் மட்டுமே போலீஸ் பட்டியலில் உள்ளனர்.

திருவாரூர், பெரம்பலூரில் தலா 84 பேர் உள்ளனர். இது தவிர காஞ்சிபுரம்-416, திருவள்ளூர்-318, விழுப்புரம்-452, கடலூர்-680, வேலூர்- 376 ரவுடிகள் உள்ளனர். இப்பட்டியல் சில ஆண்டுகளுக்கு முந்தைய புள்ளி விவரங்களின் அடிப்படையிலானது என்பதால், தற்போதைய எண்ணிக்கையுடன் சற்று மாறுபடலாம்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story