திருச்சி அருகே காவல் நிலையத்தில் தற்கொலைக்கு முயன்ற ராம்ஜிநகர் கொள்ளையன்

திருச்சி அருகே காவல் நிலையத்தில் தற்கொலைக்கு முயன்ற ராம்ஜிநகர் கொள்ளையன்
X

திருச்சி ராம்ஜி நகர் காவல் நிலையம் (கோப்பு படம்).

திருச்சி அருகே காவல் நிலையத்தில் ராம்ஜிநகர் கொள்ளையன் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருச்சி அருகே ராம்ஜி நகர் கொள்ளையன் காவல் நிலையத்தில் தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கத்தியின்றி ரத்தமின்றி கவனத்தை திசைதிருப்பி பணம் கொள்ளையடிப்பதில் வல்லவர்கள் திருச்சி அருகே உள்ள ராம்ஜி நகரை சேர்ந்த கொள்ளையர்கள். இவர்களது கைவரிசை பெரும்பாலும் தமிழ்நாட்டில் இருக்காது. டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற வட மாநிலங்களில் தான். வங்கி, நிதி நிறுவனங்கள் போன்றவற்றில் பணம் எடுக்க வருபவர்களை ஃபாலோ அப் செய்து ரூபாய் நோட்டுகளை சிதறவிட்டு அல்லது அவர்கள் மீது ஏதாவது அருவருப்பான திரவங்களை தெளித்து அவர்களது கவனத்தை திசை திருப்பி கொள்ளையடித்துவிட்டு லட்சக்கணக்கான பணத்துடன் ஊருக்கு வந்து விடுவார்கள்.

அவர்களை கண்டுபிடிப்பது மிகவும் சிரமம். ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த இந்த ராம்ஜிநகர் கொள்ளையர்களின் கைவரிசைகள் தற்போது காவல்துறையில் பின்பற்றப்படும் சி.சி.டி.வி. கேமரா காட்சி மற்றும் நவீன தகவல் தொழில்நுட்பத்தின் காரணமாக குறைந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். ஆனாலும் அவ்வப்போது ஏதாவது ஒரு குற்ற சம்பவங்கள் நடந்து விடுவது உண்டு.

அந்த வகையில் மும்பையில் 35 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு தொடர்பாக மும்பை போலீசார் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ராம்ஜி நகரை சேர்ந்த இளைஞர் ஒருவரை ராம்ஜிநகர் போலீசார் பிடித்து வந்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது அவர் திடீரென ஒரு கத்தியை எடுத்து தனது உடலில் கீறிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக அவரை அருகில் உள்ள ஒரு மருத்துவமனையில் போலீசார் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். இது சம்பந்தமாக மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story
நைட்ல இதெல்லாம் சாப்பிட கூடாதா...? அச்சச்சோ !.. இது தெரியாம இருந்துடீங்களே !