/* */

திருச்சியில் ரயில்வே ஊழியர் மனைவியிடம் நகை பணம் மோசடி

திருச்சியில் ரயில்வே ஊழியர் மனைவியிடம் நகை பணம் மோசடி செய்த இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

HIGHLIGHTS

திருச்சியில் ரயில்வே ஊழியர் மனைவியிடம் நகை பணம் மோசடி
X

திருச்சி உறையூர் சுண்ணாம்பு கார தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. தென்னக ரெயில்வேயில் புக்கிங் கிளார்க்காக பணியாற்றிய அவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.அதைத் தொடர்ந்து ஜெயலட்சுமிக்கு கணவரின் பென்சன் தொகை வருகிறது.இதற்கிடையே உறையூர் வண்டிக்கார தெருவில் வசிக்கும் பாலாஜியின் மூத்த சகோதரர் ஜெயச்சந்திரன் (வயது63) சகோதரி பிரபாவதி (வயது 65) ஆகியோர் ஜெயலட்சுமிக்கு சொந்தமான 25 பவுன் நகைகளை அடமானம் வைப்பதற்காக வாங்கியுள்ளனர்.

மேலும் ரூ. 3 லட்சத்து 97 ஆயிரம் ரொக்க பணத்தையும் கடனாக பெற்றனர் .அது மட்டும் அல்லாமல், பாலாஜியின் பென்சன் தொகையையும் ஜெயலட்சுமியின் ஏடிஎம் மூலம் எடுத்து செலவழித்துள்ளனர்.இந்த நிலையில் குடும்ப தேவைகளுக்காக ஜெயலட்சுமி அடமானம் வைக்க கொடுத்த நகை பணம் மற்றும் ஏடிஎம் கார்டை திரும்ப கேட்டுள்ளார்.

இதில் ஏற்பட்ட தகராறில் ஜெயச்சந்திரன், பிரபாபதி ஆகிய இருவரும் ஜெயலட்சுமியை தகாத வார்த்தையால் திட்டி அவரது ஆடைகளை கிழித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெயலட்சுமி உறையூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 18 Sep 2023 4:37 PM GMT

Related News

Latest News

 1. கோவை மாநகர்
  கோவையில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் மரம் விழுந்து லாரி சேதம்
 2. லைஃப்ஸ்டைல்
  தமிழில் பிறந்த நாள் வாழ்த்து கூறும் மேற்கோள்கள்
 3. லைஃப்ஸ்டைல்
  தமிழில் போகிப் பண்டிகை வாழ்த்துக்கள் சொல்லும் அழகியல்
 4. லைஃப்ஸ்டைல்
  வயசு மேல வயசு வந்து வாழ்த்துகிற நேரமிது..!
 5. லைஃப்ஸ்டைல்
  கவிதை அலங்காரத்தில் அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
 6. ஈரோடு
  டி.என்.பாளையம் வனச்சரகத்தில் நாளை யானைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்
 7. குமாரபாளையம்
  சாலை விபத்தில் இளைஞர் பலி : உடல் உறுப்புக்கள் தானம்..!
 8. வீடியோ
  Opening - Mass Entry செம்ம Vibe-ஆ இருக்கு !#saamaniyan...
 9. ஈரோடு
  சத்தியமங்கலம்: கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 1,300 கிலோ ரேஷன் அரிசி...
 10. வீடியோ
  Ramarajan,Ilaiyaraaja Combination -னே Blockbuster தான் !#ramarajan...