பல்லடம் அருகே தங்க கட்டி மோசடி வழக்கில் கணவன்- மனைவிக்கு போலீஸ் வலைவீச்சு

பல்லடம் அருகே தங்க கட்டி மோசடி வழக்கில் கணவன்- மனைவிக்கு போலீஸ் வலைவீச்சு
X
பல்லடம் அருகே தங்க கட்டி மோசடி வழக்கில் கணவன்- மனைவியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பல்லடம் அருகே தங்க கட்டி மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள தம்பதியினரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பல்லடம் அருகே உள்ள பருவாய் கிராம் குழிகாட்டு தோட்டத்தை சேர்ந்தவர் சின்னச்சாமி (வயது65) விவசாயி. இவரது வீடு அருகே பக்கத்து வீட்டில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சிவா, லட்சுமி என்ற தம்பதிகள் கடந்த ஆறு மாத காலமாக குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மார்ச் 16 ந்தேதி அன்று அவசரமாக கிருஷ்ணகிரி செல்ல வேண்டி இருப்பதாகவும், செலவுக்கு பணம் தேவைப்படுவதாகவும், அவர்களிடம் உள்ள ரூ. 5 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டியை வைத்துக்கொண்டு, ரூ. 2 லட்சம் பணம் தருமாறு சின்னச்சாமியை அவர்கள் கேட்டதாக கூறப்படுகிறது.

அவர்களது பேச்சை உண்மை என நம்பி அவர்கள் கொடுத்த தங்கக் கட்டியை வாங்கிக்கொண்டு, அவர்களுக்கு ரூ 1.40 லட்சம் பணம் மற்றும் வீட்டில் இருந்த 5 பவுன் தங்கச் சங்கிலி ஆகியவற்றை அவர்களிடம் கொடுத்துள்ளார். அதனைப் பெற்றுக் கொண்டு, ஊருக்குச் சென்று விட்டு ஒரு வார காலத்தில் திரும்பி வருவதாக சென்ற அவர்கள், கடந்த இரண்டு மாதமாக திரும்பி வரவில்லை.

இதையடுத்து, சின்னச்சாமி அவர்களது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் என வந்ததாக கூறப்படுகிறது. இதை யடுத்து அவர்கள் கொடுத்த தங்கக் கட்டியை நகைக்கடைக்கு எடுத்துச் சென்று சோதனை செய்து பார்த்தபோது அது தங்க முலாம் பூசிய உலோகம் என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தன்னை ஏமாற்றியது குறித்து காமநாயக்கன் போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தங்கக் கட்டி என போலி நகை கொடுத்து மோசடி செய்த அந்த தம்பதிகளை வீசி தேடி வருகின்றனர்.

Tags

Next Story
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: ஈரோட்டில் 170 பேர் கைது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல்