சங்ககிரி போலீஸ் நிலையத்தில் மர்ம பொருள் வெடித்து ஒருவர் உயிரிழப்பு
சங்ககிரி போலீஸ் நிலையத்தில் வெடித்த வெடியால் ஒருவர் பலியானார்.ஒருவர் படுகாயம் அடைந்தார்.
சேலம் மாவட்டம், சங்ககிரி போலீஸ் நிலையத்தில் இன்று சங்ககிரி டி.எஸ்.பி., ராஜா வருடாந்திர ஆய்வு செய்ய இருந்தார். இதற்காக போலீஸ் நிலையத்தை சுத்தப்படுத்த 3 பேரை போலீஸார் கூட்டி வந்துள்ளார்கள். ஸ்டேசனுக்கு உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் இருந்த குப்பைகளை எடுத்து வெளியில் போட்டு உள்ளார்கள். அந்த 3 பேரும் நேற்று காலை முதல் ஸ்டேசன் உள்ளே இருந்த பொருட்கள் மற்றும் குப்பைகள் ஆகியவற்றை எடுத்து வந்து ஸ்டேசனுக்கு வெளிப்புறம் போட்டு விட்டு, அதனை தீ பற்ற வைத்துள்ளார்கள்.
குப்பைகள் எரிந்து கொண்டு இருக்கும் போது அதிலிருந்த மர்மபொருள் பயங்கர சத்தத்துடன் வெடித்து, ஸ்டேஷன் முன்புறம் நிழலுக்காக அமைக்கப்பட்டிருந்த தகர கொட்டகையின் மீது விழுந்துள்ளது. அதில் அந்த மேற்கூரை தகரம் உடைந்து போலீஸாரால் அழைத்து வரப்பட்டு ஸ்டேசனை சுத்தப்படுத்தி கொண்டு இருந்த சங்ககிரி ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த அசேன் மகன் நியமத்துல்லாவின் வயிற்றை கிழித்து, 20 அடி துாரம் தூக்கி வீசியுள்ளது. இதனால் நியமத்துல்லா, (45), சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.
மேலும், விசாரணைக்கு வந்து குப்பைகளை அப்புறப்படுத்தி கொண்டு இருந்த ஈரோடு மாவட்டம், பவானியை சேர்ந்த தியாகு மகன் பரத், (24), என்பவருக்கு வலது பக்க தொடையில் காயம் ஏற்பட்டு சங்ககிரி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். தகவல் அறிந்த சேலம் மாவட்ட எஸ்.பி., அருண் கபிலன், சங்ககிரி போலீஸ் ஸ்டேசனுக்கு வந்து விசாரணை செய்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu