மதுரை அருகே 240 கிலோ கஞ்சா பிடிபட்டது -குற்றவாளி தப்பியோட்டம்
திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரம் பகுதியில் போலீசார் சோதனை நடத்தியதில் 240 கிலோ கஞ்சா பிடிபட்டது :முக்கிய குற்றவாளி தலைமறைவாகியுள்ளார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பகுதியில் கஞ்சா விற்பதாக வந்த தகவலையடுத்து மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவின்பேரில் , தனிப்படை போலீசார் அவனியாபுரம் பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அவனியாபுரம் திருப்பதி நகரில் வசிக்கும் பாண்டி என்பவரது மகன் அருண் குமார் (வயது 32 ) மற்றும் அவரது நண்பர்கள் ஆட்டோ மற்றும் டூவிலரில் வந்தனர். அவர்களிடம் தனிப்படை போலீசார் சோதனை மேற்கொண்டதில் 240 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதில், முக்கிய குற்றவாளியான அருண்குமார் என்பவர் தப்பி ஓட்டம். மீதமுள்ள 4 பேரை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் .மேலும் , கஞ்சா கொண்டு வந்த . ஆட்டோ மற்றும் 2 சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அருண்குமார் மீது, அவனியாபுரம் , கீரைத் துறை காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu