திருத்தணி-10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர் ‌போக்சோ சட்டத்தில் கைது

திருத்தணி-10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர் ‌போக்சோ சட்டத்தில் கைது
X

திருத்தணி அடுத்த வி.கே என் .கண்டிகையில் 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மாணவி‌ கொடுத்த புகாரில் இளைஞர் ‌போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த வி கே என் கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் வயது 24. இவருக்கு திருமணமாகி ஐந்து வயதில் குழந்தை உள்ள நிலையில் மனைவி பிரிந்து இவர் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் பத்தாம் வகுப்பு மாணவியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.‌ ‌

இந்நிலையில் மகளின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்ததால் மாணவியின் தாய் விசாரித்தபோது வெங்கடேசன் என்ற இளைஞர் திருமணம் செய்வதாக கூறி பாலியல் தொந்தரவு செய்வதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவி புகார் அளித்தார்.

மாணவியின் புகாரையடுத்து அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சத்தியவாணி தலைமையிலான காவல்துறையினர்இளைஞர் வெங்கடேசனை போக்சோ சட்டத்தில் கைது செய்து திருத்தணி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருத்தணி கிளை சிறையில் அடைத்தனர்.

Next Story
ai solutions for small business