குமாரபாளையம் பைபாஸ் சாலை பெண் கொலையில் திருப்பம்- கணவரே கொன்றாரா?
கொலை செய்யப்பட்ட தரணி தேவி
ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்தவர் சபரிநாதன், (30) சபரி ஸ்டுடியோ உரிமையாளர். இவருக்கும் சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த தரணி தேவிக்கும் (25) - மூன்று வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.
கருத்து வேறுபாடு காரணமாக கணவனிடம் கோபித்து கொண்ட தரணி தேவி, ஆத்தூரில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று ஆத்தூர் சென்ற சபரிநாதன், குழந்தையை விட்டுவிட்டு மனைவியுடன் காரில் புறப்பட்டுள்ளார். நேற்றிரவு 7.30 மணியளவில் பவானி மருத்துவமனைக்கு வந்து, பின்னர் குமாரபாளையம் கோட்டைமேட்டில் காரில் சென்றுக் கொண்டிருந்தனர்.
அப்போது, சில கொள்ளையர்கள் காரை நிறுத்தி தரணிதேவியின் கழுத்தில் இருந்த 7 பவுன் சங்கிலியை பறித்து கழுத்தை இறுக்கி கொன்றதாகவும், உடனிருந்த சபரியையும் தாக்கிவிட்டு சென்றதாகவும் குமாரபாளையம் போலீசாருக்கு, முதல்கட்ட தகவல் வரவே அங்கு விரைந்த காவல்துறையினர், கழுத்து இறுக்கி கொலை செய்யப்பட்ட தரணி தேவியின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலையில், காரில் சபரி - தரணி தேவி இடையே ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக தனது மனைவியை கணவன் சபரியே கொன்றதாகவும், உண்மையை மறைப்பதற்காக கொள்ளையர்கள் கொன்றுவிட்டு நகையை திருடிச் சென்றதாக போலீசாரிடம் கூறியதாகவும், திடுக்கிடும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. எனவே, சபரி கொலை செய்தாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu