மாணவி தற்கொலை வழக்கு ; கைதான இளைஞரின் அதிர்ச்சி பின்னணி

மாணவி தற்கொலை வழக்கு ; கைதான இளைஞரின் அதிர்ச்சி பின்னணி
X

கைதான கேசவ்குமார்

கோவை மாணவி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இளைஞனின் கையில் கத்தியுடன் வீடியோக்கள் பல எடுத்து வைத்திருப்பதும் தெரியவந்துள்ளது.

கோவை உப்பிலிபாளையம் ராஜிவ்காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவி லாவண்யா. இவர் கடந்த 13ம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் மாணவியின் வீட்டின் அருகில் தங்கி படித்து வந்த கேசவ்குமார் என்ற மானாமதுரையை சேர்ந்த மாணவர், கல்லூரி மாணவியை அடிக்கடி மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது. மேலும் மாணவியின் புகைப்படத்தை மார்பிங் செய்து இணையத்தில் வெளியிட்டு விடுவதாக கூறி மிரட்டியதால் அச்சமடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதுதொடர்பாக கேசவ குமாரையும் அவரது தாயார் மங்கையர்கரசியும் கைது செய்தனர்.


பணம் பறிக்கும் கேசவ குமாரின் நடவடிக்கைகள் தெரிந்தும், அவற்றுக்கு உடந்தையாக இருந்துள்ளார். இந்நிலையில் கைது செய்யப்பட்ட கேசவ குமாரின் செல்போனில் மாணவர்களை தாக்கி அவர்களிடம் பணம் பறிப்பதும், மாணவர்களை ரோட்டில் அடிப்பதும் போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. மேலும் கையில் கத்தியுடன் வீடியோக்கள் பல எடுத்து வைத்திருப்பதும் தெரியவந்தது. இந்த காட்சிகள் தொடர்பாகவும் சிங்காநல்லூர் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!