கள்ளக்காதலி மற்றொரு புது காதலன் உடன் உல்லாசம், இளைஞர் செய்த திகில் காரியம்

கள்ளக்காதலி மற்றொரு புது காதலன் உடன் உல்லாசம், இளைஞர் செய்த திகில் காரியம்
X

பைல் படம்

கள்ளக்காதலி மற்றொரு புதுக் காதலனுடன் உல்லாசமாக இருப்பதை பார்த்த இளைஞர் செய்த திடுக், திக்கிடும் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திண்டுக்கல் மாவட் டம், பழநி அருகே பாப்பம்பட்டியை சேர்ந்தவர் பத்மநாதன் (32). மடத்து குளத்தில் உள்ள ஒரு அட்டை மில்லில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர்.

பழநி அருகே சின்ன கலையம்புத்தூர் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் அய்யனார் மனைவி விக்டோரியா (45). இரண்டு மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக விக்டோரியா, கணவரை பிரிந்து சமத்துவபுரத்தில் வசித்து வந்தார்.

விக்டோரியாவும் இதே அட்டை மில்லில் வேலை பார்த்து வந்தார். வேலைக்கு சென்ற இடத்தில் பத்மநாதன், விக்டோ ரியா இடையே பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது. கள்ளக்காதலர்கள் இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர்.

விக்டோரியாவின் மீது பத்மநாபனுக்கு ஆசை அதிகமானது. இதனால் இருவரும் விக்டோரியாவின் வீட்டிலேயே சந்தித்து சந்தோஷமாக இருக்க முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று முன்தினம் வேலைக்கு செல்வதாக மனைவி செல்லமணியி டம் கூறி விட்டு பத்மநாபன், விக்டோரியாவின் வீட்டிற்கு சென்றார்.

இரவு விக்டோரியா வீட்டில் இருந்து சிறிது நேரத்தில் கத்தியால் குத்தப்பட்டு குடல் சரிந்த நிலையில் பத்மநாபன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அதேசமயம், விக்டோரியாவும் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

தகவலறிந்து எஸ்பி சீனிவாசன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். டிஎஸ்பி சிவா தலைமையிலான பழநி தாலுகா போலீசார், இருவரது உடல்களையும் மீட்டு அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர்.

விக்டோரியா உடல் அருகே கிடந்த டைரியை போலீசார் கைப் பற்றி விசாரணை நடத்தினர். அதில் 'என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை ' என எழுதி இருந்ததாக கூறப்படுகிறது. இச்சம்ப வம் தொடர்பாக விக் டோரியாவின் பக்கத்து வீட்டில் வசிக்கும் சங்கர்

(32) என்பவர் பழநி ஒருங் கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

முதல் கட்ட விசார ணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விக்டோரியா விற்கு பத்மநாதன் மட்டு மின்றி, பக்கத்து வீட்டை சேர்ந்த சங்கருடனும் கள்ளத்தொடர்பு இருந்தது.

இந்த நிலையில் புதிதாக வேலை செய்யும் இடத்தில் கிடைத்த காதல் இருவருக்கும் அளவுககு அதிகமான இன்பத்தை கொடுத்தது.

பக்கத்து வீட்டில் இருக்கும் சங்கருடன் உறவு கொண்டால் அக்கம் பக்கத்தில் தெரியவர தொடங்கியதால், விக்டோரியா அசிங்கமாகிவிடும் என்று சங்கருடன் நெருக்கமாக இருப்பதை தவிர்த்து வந்தார்.

தன்னை விக்டோரிய ஒதுக்கி வருவது சங்கருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. விக்டோரியா தனக்கு மட்டுமே என நினைத்து வாழ்ந்து வந்த சங்கர் விக்டோரியாவின் வீட்டிற்கு வேறு ஒரு ஆண் வந்து செல்வதைப் பார்த்தார்.

சம்பவ நாளன்று விக்டோரியாவுடன் பத்மநாபன் உல்லாசமாக இருப்பதை நேரில் பார்த்தார். அப்போது சங்கருக்கும், பத்மநாதனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சங்கர் என் காதலுக்கு நீ இடையூறா என்று கூறியவாறு மறைத்து வைத்திருந்த கத்தியால் பத்மநாதனை குத்தி கொலை செய்தார்.

பிரச்னை பெரிதானதால் பயந்துபோன விக்டோரியா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து சங்கரிடம், பழநி தாலுகா போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!