திருச்சி அருகே தனியார் நிறுவன மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

திருச்சி அருகே தனியார் நிறுவன மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
X
திருச்சி அருகே திருவெறும்பூரில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு போனது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே காட்டூர் விக்னேஷ் நகர் 2-வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் பாலச்சந்தர் (48) இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.இவரது மனைவி மற்றும் 2 மகன்களுடன் வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில்பாலச்சந்தரின் மனைவி ஓசூரில் உள்ள புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்கு வீட்டை பூட்டி விட்டு தனது இரு மகன்களுடன் ஓசூர்சென்றுவிட்டார்.பின்னர் அவர் வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது வீட்டின் முன் பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சிஅடைந்தார். மேலும் அவர் உள்ளே சென்று பார்த்த பொழுது பீரோவில் இருந்த 8.5 சவரன் தங்க நகை மற்றும் 1.5 கிலோ மதிப்புள்ள 2வெள்ளி பாத்திரங்கள், விலை உயர்ந்த வாட்ச் மற்றும் கம்ப்யூட்டருக்கு பயன்படுத்த கூடிய மோடம் ஆகியவை கொள்ளை போனதுதெரியவந்தது.

இது குறித்து பாலச்சந்தரின் மனைவி திருவெறும்பூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. கைரேகை நிபுணர்களும் பூட்டு, கதவு, ஜன்னல்களில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் விரல் ரேகைகளை பதிவு செய்துவிட்டு சென்றனர்.

இது குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!