திருச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு

திருச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு
X
திருச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வழக்கு பதிவு செய்யாமல் இருக்க ரூ.2 லட்சம் லஞ்சம் பெற்ற திருச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை காவல் நிலையத்தில் 2023ம் ஆண்டு இன்ஸ்பெக்டராக பனியாற்றியவர் ராஜேந்திரன் (வயது 55). இவர் தற்போது திருச்சி மாவட்டம் தொட்டியம் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். விராலிமலை அருகே பொருவாய் கிராமத்தில் செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தை சேர்ந்த ராஜ்குமாருக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்வதில் அவருக்கும், நிலத்தரகர்களுக்கும் ஏற்பட்ட பிரச்சினையில் விராலிமலை காவல் நிலையத்தில் 2023 மார்ச் 17ம்தேதி புகார் அளிக்கப்பட்டது

இதில் ராஜ்குமார் மீது வழக்கு பதிவு செய்யாமல் இருக்க இன்ஸ்பெக்டர் ரூ.2லட்சம் லஞ்சமாக பெற்றுள்ளார்.இதுதொடர்பாக கடந்த 2023 அக்.4ம் தேதி புதுக்கோட்டை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாருக்கு புகார் வந்தது. குற்றச்சாட்டு உறுதியானதால் நேற்று இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare