திருச்சியில் பள்ளி தோழியை கர்ப்பமாக்கிய இளைஞரை தேடுகிறது போலீஸ்

திருச்சியில் பள்ளி தோழியை கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசார் தேடி வருகிறார்கள்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
திருச்சியில் பள்ளி தோழியை கர்ப்பமாக்கிய இளைஞரை தேடுகிறது போலீஸ்
X

திருச்சி திருச்சி குமரன் நகர் அவ்வையார் தெரு பகுதியை சேர்ந்தவர் அனிதா (வயது 31) இவருக்கும் கோபிநாத் என்பவருக்கும் கடந்த 2010ல் திருமணம் நடந்தது. பின்னர் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். அதன் பின்னர் அனிதா தனது தாய் வீட்டுக்கு வந்து விட்டார்.

இந்த நிலையில் தன்னுடன் பள்ளியில் படித்த திருச்சி உறையூர் சின்ன சௌராஷ்ட்ரா தெரு பகுதியைச் சேர்ந்த ரகுநாதன்( 31 )என்பவருடன் அனிதாவிற்கு தொடர்பு ஏற்பட்டது. பின்னர் இருவரும் தனிமையில் நெருக்கமாக இருந்து வந்தனர். புதிய நட்பு மலரவும் அனிதா 2021 ல் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.

அதன் பின்னர் ரகுநாதன் அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்து வந்தார். இதில் அனிதா கர்ப்பம் அடைந்தார். அதைத்தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ரகு நாதனை வலியுறுத்தினார். ஆனால் அதற்கு அவர் ஒப்புக்கொள்ள மறுத்தார். மேலும் காதலியை சந்திப்பதை தவிர்த்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அனிதா காதலனை தேடி அவரது வீட்டுக்குச் சென்றார். அப்போது வீட்டில் இருந்த ரங்கநாதனின் பெற்றோர் அனிதாவை கெட்ட வார்த்தையால் திட்டி அடித்து கர்ப்பத்தை கலைக்கச் சொல்லி மிரட்டி துரத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட அனிதா ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் வனிதா திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பெண்ணை அனிதாவை ஏமாற்றிய ரகுநாதன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 21 Sep 2023 5:18 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    மின் கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம்: அமைச்சர் அறிவிப்பு
  2. குமாரபாளையம்
    குமாரபாளையம் நகராட்சி சார்பில் சென்னைக்கு ரூ.13 லட்சம் நிவாரண...
  3. சோழவந்தான்
    மதுரையில் டெங்கு தடுப்பு பணி குறித்து மேயர் ஆய்வு
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் ஆணையர், கவுன்சிலர்கள்...
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் மழை நீரை அகற்ற 20 எச்.பி. மோட்டார் திறன் கொண்ட பம்பிங்...
  6. காஞ்சிபுரம்
    நீர் இருப்பு குறித்து செம்பரம்பாக்கம் ஏரியினை ஆய்வு செய்த 3...
  7. திருவொற்றியூர்
    மின்விநியோகம் நிறுத்தப்பட்டதைக் கண்டித்து சாலை மறியல்
  8. கல்வி
    தமிழகம் முழுவதும் மேல்நிலைப்பள்ளி அரையாண்டு தேர்வுகள் தேதி மாற்றம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான மாவட்ட உயர்மட்ட குழுக் கூட்டம்
  10. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு தீர்மானங்களை திட்டமிடுதல் மற்றும் கடைபிடித்தல்...!