திருச்சி அருகே விடுதியில் தங்கி படித்த கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

திருச்சி அருகே விடுதியில் தங்கி படித்த  கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை
X
திருச்சி அருகே விடுதியில் தங்கி படித்த கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரத்தை அடுத்த பச்சமலை சோழமாத்தி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்/ இவரது மகள் ஜனனி (வயது 18 )செந்தில் நரசிங்கபுரம் அருகே உள்ள கானாவாடி கிராமத்தில் தங்கி விவசாய கூலி வேலை செய்து வருகிறார். ஜனனி நாமக்கல் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து படித்து வந்தார். இந்நிலையில் தீபாவளி விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு வந்துள்ளார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கில் தொங்கி உள்ளார். அந்த நேரம் வீட்டில் தந்தையும் வேலைக்கு சென்று விட்டதால் ஜன்னலின் வழியாக இதைப்பார்த்த ஜனனியின் தாத்தா செங்கமலை கதறி அழுது உள்ளார்.

உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வந்து ஜனனியின் உடலை இறக்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஜனனி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து உப்பிலியபுரம் போலீசார் ஒரு வழக்கு பதிவு செய்து ஜனனியின் உடலை துறையூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.

கல்லூரி மாணவி ஜனனி தற்கொலைக்கான காரணம் என்ன என தெரியவில்லை. போலீசார் இது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story
ஆயுள் முழுக்க இதய நோய் வராம இருக்க இந்த வகை வாழைப்பழம் ஒன்னு போதும் ..! எப்படி சாப்பிடணும் ?