திருச்சியில் நிதி நிறுவன அதிபரிடம் பண மோசடி செய்த ஆசிரியை மீது வழக்கு

திருச்சியில் நிதி நிறுவன அதிபரிடம் பண மோசடி செய்த ஆசிரியை மீது வழக்கு
X
திருச்சியில் நிதி நிறுவன அதிபரிடம் பண மோசடி செய்த ஆசிரியை மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருச்சியில் நிதி நிறுவன அதிபரிடம் ரூ. 20 லட்சம் மோசடி செய்த ஆசிரியை உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

திருச்சி பொன்மலைப்பட்டி அருள் நகரை சேர்ந்தவர் ஜான் பானர்ஜி (வயது 59) நிதி நிறுவன அதிபர். அவரை திருச்சி பாலக்கரை பீம நகர் ராஜா காலனியைச் சேர்ந்த சாமுவேல் நியூட்டன் மற்றும் அவரது மனைவி சாந்தி வாலண்டினா ஆகியோர் அணுகி குறைந்த விலைக்கு நகை விற்பனை செய்வதாக தங்களை அறிமுகம் செய்து கொண்டனர். இதை நம்பிய ஜான் பானர்ஜி அவர்களிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ. 31 லட்சம் கொடுத்தார்.

ஆனால் அவர்கள் உத்தரவாதம் அளித்தபடி நகையை கொடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து அவர் தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டார். இதனையடுத்து சாந்தி வாலண்டினா ரூ. 10 லட்சத்திற்கான டிடியை தபால் மூலமாக ஜான் பானர்ஜிக்கு அனுப்பி வைத்துவிட்டு மீதமுள்ள பணத்தை தராமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

மேலும் ஜான் பானர்ஜியை பொன்மலைப்பட்டி ஜீவா தெரு பகுதியில் வைத்து சாமுவேல் நியூட்டன், அவரது மனைவி சாந்தி வாலண்டினா உள்பட 3 பேர் சேர்ந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து ஜான் பானர்ஜி பொன்மலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பெயரில் பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் சாந்தி வாலண்டினா அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!