1.5 கிலோ தங்க நகையுடன் மாயமான ஊழியர்,பிணமா தோண்டி எடுப்பு, டிரைவர் உட்பட 7 பேர் கைது

திருச்சியில் பிரபல நகைக்கடை ஊழியரை 1.5 கிலோ தங்க நகைக்காக கொலை செய்து புதைத்த டிரைவர் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருச்சி அண்ணாமலை நகர் கரூர் பைபாஸ்ரோடு பகுதியில் உள்ள பிரனவ் ஜுவல்லரிக்காக அதன் ஊழியர் மார்ட்டின் ஜெயராஜ் சென்னையில் தங்க நகை கொள்முதல் செய்ய சென்றார். ரூ 80 லட்சம் மதிப்பிலான ஒன்றரை கிலோ தங்க நகைகளை வாங்கினார்.

ஆனால் அவர் திருச்சிக்கு திரும்பி வரவில்லை . இது குறித்து உறையூர் போலீசில் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் மதன் கொடுத்த புகாரின் பேரில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது கார் டிரைவராக செயல்பட்ட மாம்பழச்சாலையை சேர்ந்த பிரசாந்த் என்பவர் தனது நண்பர்களான கீழக்குறிச்சி பிரசாந்த், மண்ணச்சநல்லுார் செல்வா, பிரவீன், அறிவழகன், அரவிந்த், விக்ரம் ஆகியோருடன் சேர்ந்து தொழுதுார்-வேப்பூர் இடையே ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் காரை நிறுத்தி மார்ட்டின் ஜெயராஜை கொலை செய்தனர்,

பின்னர் உடலை எடுத்து சென்று மண்ணச்சநல்லூர் அருகேஅழகிய மணவாளம் கிராமத்தில் உள்ள ஒரு திடலில் புதைத்தது தெரிய வந்தது.அவர்களை கைது செய்த போலீசார் கொலைக்கு பயன்படுத்திய வாகனங்கள், ஆயுதங்கள் மற்றும் கொள்ளையடிக்கப் பட்ட 1.5 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

இதனை தொடர்ந்து போலீசார் டிரைவர் கொடுத்த வாக்கு மூலத்தின் படி புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் கண்டுப்பித்து. அங்கு தாசில்தார், திருச்சி அரசு மருத்துவமனை ஆர்எம்ஓ முன்னிலையில் பிணத்தை தோண்டி எடுத்து அந்த இடத்திலேயே பிரேதபரிசோதனை செய்தனர். அதன் பின்னர் உடலை அவரின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். 7 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story