திருச்சியில் என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி ஜெகன் மீது 53 வழக்குகள்

திருச்சியில் என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி ஜெகன் மீது 53 வழக்குகள்
X

ரவுடி கொம்பன் ஜெகன் என்கவுன்டர் செய்யப்பட்ட இடத்தை திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் பார்வையிட்டார்.

திருச்சியில் என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி ஜெகன் மீது 53 வழக்குகள் இருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் கூறினார்.

திருச்சி அருகே போலீஸ் துப்பாக்கி சூட்டில் என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி ஜெகன் மீது 53 வழக்குகள் இருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பனையகுறிச்சி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி ஜெகன் என்கிற கொம்பன் ஜெகன் (வயது 30 ).இவர் மீது கொலை,ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து உட்பட ஏராளமான வழக்குகள் திருச்சி மாநகர், திருச்சி மாவட்டம் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் நிலுவையில் உள்ளன. இதன் காரணமாக இவரை தனிப்படை போலீசார் பல மாதங்களாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் இன்று தனிப்பட போலீசாரில் ஒரு பிரிவினர் திருச்சி சமயபுரம் அருகே சனமங்கலம் என்ற கிராமத்தில் ஆடுகள் திருட்டு மற்றும் வழிப்பறி செய்பவர்களை கண்டுபிடிப்பதற்காக ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் ரவுடி கொம்பன் ஜெகன் பதுங்கி இருப்பது தனிப்படை போலீசாருக்கு தெரிய வந்தது. சப் இன்ஸ்பெக்டர் வினோத் தலைமையிலான போலீசார் அவரை சுற்றிவளைத்து பிடிக்க முயற்சித்த போது போலீசாரை அவர் தாக்கினார். இதில் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்குமாருக்கு இடது கையில் அரிவாள் விட்டு விழுந்தது. இதனை தொடர்ந்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.இதில் ரவுடி கொம்பன் ஜெகன் காயம் பட்டு உயிரிழந்தார்.

ரவுடி ஜெகன் தாக்கியதில் காயம் அடைந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வினோத்.

சம்பவம் நடந்த இடத்தை திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் ரவுடி கொம்பன் ஜெகன் மீது 53 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் கொலை வழக்குகள் மட்டும் நான்கு. கொலை முயற்சி வழக்குகள் 4 . போலீசாரை கண்டதும் அவர் பெட்ரோல் குண்டு மற்றும் நாட்டு வெடிகுண்டு வீச முற்பட்டார். சப் இன்ஸ்பெக்டர் வினோததை அரிவாளால் வெட்டினார். இதன் காரணமாக அவர் மீது இரண்டு ரவுண்டு துப்பாக்கியால் சுடப்பட்டது பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் லால்குடி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் அங்கு இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர் என்றார்.

Tags

Next Story
நைட்ல இதெல்லாம் சாப்பிட கூடாதா...? அச்சச்சோ !.. இது தெரியாம இருந்துடீங்களே !