மணப்பாறை அருகே பஸ் மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

மணப்பாறை அருகே  பஸ் மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழப்பு
X

விபத்தில் தலைகுப்புற கவிழ்ந்த பஸ்.

மணப்பாறை அருகே பஸ் மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயம் அடைந்தனர்.

திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்தும் காரும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த அரசுப் பேருந்தில் 25 பேருக்கு மேல் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில், பேருந்து மணப்பாறை அருகே உள்ள கல்கொத்தனூர் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது விபத்தில் சிக்கியது.

எதிரே வேகமாக வந்த கார் அரசுப் பேருந்தின் மீது மோதியது. அரசுப் பேருந்து ஓட்டுநர் பேருந்து காருடன் மோதுவதைத் தவிர்க்க முயற்சி செய்துள்ளார். ஆனால், அதற்குள் கார் வந்த வேகத்தில் பேருந்து மீது மோதி நசுங்கியது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரப் பள்ளத்தில் பாய்ந்துவிட்டது.

இந்த பயங்கர விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர். அவர்கள் அனைவரும் காரில் பயணித்தவர்கள் என்று முதல் கட்டத் தகவலில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சுமார் 20 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்

விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசுப் பேருந்தும் காரும் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!