திருச்சியில் தனியார் நிறுவன மேலாளரிடம் ஓடும் பஸ்சில் நகை திருடிய 4 பேர் கைது

திருச்சியில் தனியார் நிறுவன மேலாளரிடம் ஓடும் பஸ்சில் நகை திருடிய 4 பேர் கைது
X
திருச்சியில் தனியார் நிறுவன மேலாளரிடம் ஓடும் பஸ்சில் நகை திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சியில் பேருந்தில் நகை திருடிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

தனியார் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மேனேஜர் ஒருவர் கடந்த 17ஆம் தேதி தனது குடும்பத்தினருடன் உறவினர் இல்ல திருமணத்திற்கு செல்வதற்காக இருபத்து மூன்றரை பவுன் தங்க நகைகளை ஒரு டிராவல்ஸ் பேக்கில் வைத்துக் கொண்டு திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து மத்திய பேருந்து நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

தனது டிராவல்ஸ் பேக்கை அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்று விட்டதாகவும் பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை என இன்று பாலக்கரை காவல் நிலையத்தில் அவர் புகார் செய்தார். இந்த புகார் மனுவை தொடர்ந்து திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி உத்தரவின்படி டிராவல்ஸ் பைக்கில் வைத்திருந்த நகை பையை திருடிய நபர்களை கைது செய்ய காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

பேருந்தில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் சம்பவம் நடைபெற்ற இடத்தின் வழி நெடுகிலுள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து விசாரணை செய்தனர்.

இந்த விசாரணையில் ஸ்ரீரங்கம் அழகிரி புரத்தைச் சேர்ந்த அப்துல் அஜீஸ் என்கிற வெள்ளை ராஜா (வயது 42 )தென்னூரைச்சேர்ந்த சூசை ராஜ் (வயது 34 )காஜா தோப்புவை சேர்ந்த யாசர் அராபத் (வயது 29 )மற்றும் அரியமங்கலம் மதினா பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ஷேக் தாவூத் என்கிற கோழி சேக் (வயது 38 )ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் தான் இந்த பேக்கை திருடியது தெரியவந்தது .கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து திருட்டுப் போன இருபத்து மூன்றரை பவுன் நகை உடனடியாக மீட்கப்பட்டது அவர்களுக்கு திருட்டு பொருட்களை மறைக்கவும், உதவியாக இருந்த பீமநகரை சேர்ந்த அன்வர் சதாக் (49 ) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

மேற்படி ஐந்து நபர்களும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். பின்னர் அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!