சென்னை திருவொற்றியூரில் இளைஞரை வெட்டி கொலை செய்த 3 பேர் கைது

சென்னை திருவொற்றியூரில் இளைஞரை வெட்டி கொலை செய்த  3 பேர் கைது
X
சென்னை திருவொற்றியூரில் இளைஞரை வெட்டி கொலை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவொற்றியூரில் வாலிபரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை மேயர் பாசுதேவ் தெருவை சேர்ந்தவர் சோபன்குமார்(வயது27). இவர் புறா வளர்த்து வந்துள்ளார். தற்போது சபரிமலை செல்வதற்காக மாலை அணிந்திருந்தார். நேற்று திருவொற்றியூர் ராஜா சண்முகம் நகரில் நடைபெற்ற ஐயப்ப பூஜையில் கலந்துகொள்வதற்காக திருவொற்றியூர் கே.சி.பி சாலை வழியாக நடந்து சென்றுள்ளார்.

அந்த சமயத்தில் சோபன் குமாரின் நண்பர் பிரசாத் குடிபோதையில் வந்துள்ளார். இவர்கள் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்த காரணத்தால் அந்த பிரச்னையை பேசி இரண்டு பேரும் வாக்குவாதம் செய்துள்ளனர் .

இந்தநிலையில், அங்கு கிடந்த பீர்பாட்டிலை சோபன்குமார் எடுத்து பிரசாத் தலையில் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார். ரத்தவெள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்த பிரசாத்தை அப்பகுதியினர் மீட்டு உடனடியாக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் பிரசாத்தின் நண்பர்கள் ஜோதிபாசு (26), சுரேஷ் (23), நிர்மல்குமார் (22) ஆகியோர் கையில் பெரிய கத்தி, அரிவாள்களுடன் வந்து நண்பரை தாக்கிய சோபன்குமாரை தேடியுள்ளனர். அந்த சமயத்தில், திருவொற்றியூர் மேற்கு மாடவீதி அருகில் சோபன்குமார் நிற்பதாக கிடைத்த தகவல்படி அங்கு சென்று சுற்றிவளைத்து சோபன்குமாரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

அப்போது ஜோதிபாசு தன்னிடம் இருந்த கத்தியால் சோபன்குமார் கழுத்தில் சரமாரியாக குத்தியதில் சோபன் குமார் அந்த இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தார். இதையடுத்து அவரை தீர்த்துக்கட்டிய கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் திருவொற்றியூர் இன்ஸ்பெக்டர் காதர்மீரான் போலீசாருடன் சம்பவ இடத்துக்கு வந்து சோபன்குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதன்பின்னர் ஜோதிபாசு, சுரேஷ், நிர்மல்குமார் ஆகியோரை கைது செய்தனர். ஜோதிபாசு மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!