3 நகரங்களில் பொதுமுடக்கம் அமல்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் 3 நகரங்களில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது.
பள்ளி மற்றும் கல்லூரிகளும் மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என மத்தியப் பிரதேச அரசு அறிவித்துள்ளது. மேலும், மகாராஷ்டிராவுக்குச் செல்லும் பேருந்து சேவையை நிறுத்துமாறு முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளார். மேலும் நாளொன்றுக்கு 5 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்
மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அம்மாநிலத்தின் எல்லையை பகிர்ந்து கொள்ளும் இந்தூர், போபால் மற்றும் ஜபல்பூர் ஆகிய 3 நகரங்களில் 2 நாட்களுக்கு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 10 மணி முதல் வரும் திங்கள்கிழமை காலை 6 மணி வரை பொதுமுடக்கம் அமலில் இருக்கும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu