ஒரே நாளில் மேலும் 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி

ஒரே நாளில் மேலும் 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி
X
கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில், ஒரே நாளில் 2 தடுப்பூசிகளுக்கு மத்திய அரசின் மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

இந்தியாவில், கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் இருந்தாலும், ஒமிக்ரான் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க, தடுப்பூசி போடும்பணியை மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது. நம் நாட்டில் தற்போது கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசி, பரவலாக போடப்பட்டு வருகிறது. ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி பயன்பாடு, மிகக் குறைவாகவே உள்ளது.

இந்த நிலையில், மத்திய அரசு இன்று, சீரம் நிறுவனத்தின் கோவோவேக்ஸ் தடுப்பூசிக்கும், ஹைதராபாத்தைச் சேர்ந்த பயோலாஜிக்கல்-இ நிறுவனத்தின் கார்பிவேக்ஸ் தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கியுள்ளது. இந்த இரு தடுப்பூசிகளையும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குப் பயன்படுத்தலாம். இது தவிர, மால்னுபிராவிர் எனும் ஆன்டி வைரஸ் மாத்திரைக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், "மத்திய அரசின் மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒரே நாளில் 3 மருந்துகளுக்கு அனுமதி அளித்துள்ளது. கார்பிவேக்ஸ் தடுப்பூசி, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் ஆர்பிடி புரோட்டின் வகை தடுப்பூசி" என்று கூறியுள்ளார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!