கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வு? இன்று வெளியாகிறது அறிவிப்பு

கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வு?  இன்று வெளியாகிறது அறிவிப்பு
X
தமிழகத்தில், கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வு அளிக்கலாமா என்று, முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள், வரும் 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே, தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் அளிக்கலாமா என்பது குறித்தும், கொரோனா கட்டுப்பாடுகளை மேலும் நீட்டிப்பது குறித்தும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

இன்று காலை 11.30 மணியளவில், சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில், தலைமைச்செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டதாலும், பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், இக்கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

Tags

Next Story
ai in future agriculture